"ஊரடங்கா?".. நெருங்கி வரும் ரிசல்ட்.. மே 1, 2.. முழு லாக்டவுன் வருமா.. தொண்டர்கள் பதைபதைப்பு
1, 2, தேதிகளில் முழு லாக்டவுன் போடப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது
சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், வரும் 1, 2 ஆகிய 2 நாட்களும் முழு ஊரடங்கு போடப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாளைக்கு முன்பு தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது.. இதை சுகாதார செயலாளரே தெரிவித்திருந்தார்.. இதற்கு காரணம், கடந்த வாரம் கட்டுப்பாடுகள் ஏராளமாக விதிக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிறு அன்று முழு லாக்டவுன் போடப்பட்டதாலும்தான், தொற்று ஓரளவு குறைந்தது என்று சொல்லப்பட்டது.
ஆனால், நேற்று ஒரே நாளில் பாதிப்பு அதிகமாகி விட்டது.. இதனிடையே, மத்திய சுகாதாரத் துறை பாதிப்பு அதிகமாக உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த வலியுறுத்தியுள்ளது..

பாதிப்பு
அந்த வகையில், நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையை அதிகமாக தொட்டுவரும் தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை.. அதிகாரிகள் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள். மேலும் எவ்வாறு நடவடிக்கைகள் எடுத்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

முழு ஊரடங்கு
அதேசமயம், மே 2-ம் தேதி ரிசல்ட் வர உள்ளது.. இந்த வாக்கு எண்ணிக்கையை தள்ளிப்போட வேண்டும் என்று ஏற்கனவே சிலர் கோரியிருந்தனர்.. ஆனால், அன்றைய தினம் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் ஏற்கனவே தெளிவாக அறிவுறுத்திவிட்டது.. புதுச்சேரியில் மட்டும் மே 1, 2 தேதிகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது...

ஆலோசனை
அந்த வகையில், தமிழகத்திலும் அதே 2 நாளைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தினால் பொருளாதாரமும் பாதிப்படையும் என்பதால் அதிகாரிகள் குழப்பத்தில் இருப்பதால்தான் இந்த ஆலோசனை தொடர்கிறது.

லாக்டவுன்
மேலும் வெற்றி கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடை விதித்தாலும், அன்றைய தினம் கூட்டம் சேருவதை தவிர்க்க முடியாது என்பதால், முழு லாக்டவுன் போடப்படுமா அல்லது பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இதுஅப்படியே மறுநாளும் தொடர வாய்ப்பிருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

விளக்கம்
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று விளக்கம் தந்துள்ளார்.. அதில், 2,3 தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.. 1,2 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications