ஜனவரியில் தமிழக சட்டசபை கூட்டம்... ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது!
சென்னை: ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுவது வழக்கம். இதன்படி தமிழக சட்டப்பேரவையின் 5வது கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்க உள்ளது.

அதிமுக அரசு பொறுப்பேற்றுள்ள 15வது சட்டசபையின் 4வது கூட்டம் ஜனவரி 8, 2018ல் நடந்தது. இதைத் தொடர்ந்து நிகழ் நிதியாண்டிற்கான பட்ஜெட் அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகளும் மே மாதம் 29ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி வரை நடைபெற்றது.
6 மாத கால இடைவெளிக்குள் அடுத்த கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்பதால் 2019 ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபை கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரானது 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த 5 நாட்கள் சட்டசபையில் காரசார விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். இதேபோல் திருப்பரங்குன்றம் எம்.எல். ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும்.
ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பேரவை கூட்டத் தொடரின் போது ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications