ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை.. சொல்வது அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: மரியாதைக்குரிய இந்திய உச்சநீதிமன்றம், அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் தமக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 குற்றவாளிகளையும் பேரறிவாளன் விடுதலையை காரணம் காட்டி விடுதலை செய்துள்ளது.

நிரபராதிகள் அல்ல

நிரபராதிகள் அல்ல

பாஜக, நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. உச்சநீதிமன்றம் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்திருப்பதை புரிந்து கொள்கிறது. ஆனால் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள், நிரபராதிகள் என விடுதலை செய்யப்படவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

பேரறிவாளனை அரவணைத்த ஸ்டாலின்

பேரறிவாளனை அரவணைத்த ஸ்டாலின்

உச்சநீதிமன்றம், இத்தீர்ப்புகளை வழங்கியதும் காங்கிரஸ் கட்சி காட்டும் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலையானது முதல்வர் ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார். அதனை கண்டிக்க முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 தேர்தல் வெற்றி முக்கியமா?

தேர்தல் வெற்றி முக்கியமா?

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று 6 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை அரை மனதுடன் கண்டித்தாலும் அவர்களது உண்மையான தலைமையும் அவரது பிள்ளைகளும் கடந்த காலங்களில் கடிதங்கள் வாயிலாக, நேரடி சந்திப்புகள் வாயிலாக குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக சிறையில் இருந்து விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் காட்சிக்கு தேசிய ஒருமைப்பாட்டை விட தமிழக தேர்தல் வெற்றிகள் முக்கியமாகிவிட்டது.

 புகலிடம் கூடாது

புகலிடம் கூடாது

தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் சாசனம் தமக்கு வழங்கிய பொறுப்பையும் நமது தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு புகலிடம் ஆக்கிவிட வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+