தப்பே செய்யலைன்னா எதுக்கு ‘முதல்வர்கள்’ அலறனும்? கெஜ்ரிவாலை முன்வைத்து ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
சென்னை: தவறே செய்யாதவர்கள் முதல்வர்கள் என்றால் ஏன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சனையில் அச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தம்ழிநாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு சம்மன்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை இன்று ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுவிட்டார் கெஜ்ரிவால்.

மமதா பானர்ஜி கண்டனம்: அதேநேரத்தில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தை "இந்தியா" கூட்டணி கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், இன்று கெஜ்ரிவால்; நாளை தேஜஸ்வி யாதவ்; அதற்கு அடுத்து ஹேமந்த் சோரன்; பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என நடவடிக்கைகள் பாயும் என அச்சம் தெரிவித்தனர். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதை விமர்சித்திருந்தார்.

அமலாக்கத்துறை மிரட்டல்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைய சூழ்நிலை அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக IT-ஐ, EDஐ அதாவது அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற ஒரு பெரிய நிறுவனம், அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இதுபோல ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று அவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள், கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி செய்தி வந்தவுடனே, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்கிறார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிகூத்து என விமர்சனம் செய்திருந்தார்.

அண்ணாமலை விமர்சனம்: இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் ஆவணங்கள் இருக்கின்றன; சாட்சியங்கள் இருக்கின்றன. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அதிகம் எனக்கு தெரியாது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதால் சில முதல்வர்கள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளை தெரிவிக்கின்றனர். நீங்கள் தவறு செய்யாமல் இருந்தால் எதற்காக இப்படி எல்லாம் அச்சத்துடன் கருத்து சொல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications