யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அஜித் குமார் கேஸில் நீடிக்கும் மர்மம்.. நயினார் நாகேந்திரன் கேள்வி!
சென்னை: அஜித் குமார் மரணத்தில் எப்ஐஆர் பதிவு செய்யாமலேயே தனிப்படை அமைத்து விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்தத் தலைமைச் செயலக அதிகாரியைப் பற்றிய தகவல்கள் இன்னும் அரசு வெளியிடாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் அஜித் குமார் மரணத்தால் ஒவ்வொரு நாளும் புதிய புதிய மர்மங்கள் வெளியாகி வருகிறது.

அவிழாத முடிச்சுகள்
9 சவரன் தங்க நகைக்காக போலீசார் அஜித் குமாரை உயிர் போகும் அளவிற்கு அடித்தது ஏன்?, எஃப்ஐஆர் கூட போடாமல் அஜித் குமார் விசாரிக்கப்பட்டது ஏன்?, தனிப்படை காவலர்கள் விசாரணைக்குள் வந்தது எப்படி?, நிகிதா மீதான மோசடி புகார்கள் நிலை என்ன?, 9 சவரன் தங்க நகை என்ன ஆனது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
கஞ்சா கொடுத்து அடித்த போலீசார்
அதேபோல் நிகிதாவின் புகாருக்கு பின் தலைமைச் செயலக நிர்வாகி ஒருவரின் அறிவுறுத்தலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காவலர்கள் அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்துதான் அடித்திருக்கிறார்கள் என்று அவரின் நண்பர் மனோஜ் பாபு தெரிவித்துள்ளார்.
3 கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில் அஜித் குமார் மரணம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 3 கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணத்தினால் நேர்ந்த ரணம் ஆறும் முன்னே அவ்வழக்கில் தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன!
ஆகவே, சில நாட்கள் முன்பு நான் எழுப்பிய 9 கேள்விகளைத் தொடர்ந்து, மேலும் 3 கேள்விகளை தமிழக பாஜக சார்பாக முன்வைக்கிறேன்:
- அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா மீது ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு அன்றையத் துணை முதல்வர் ஸ்டாலினின் நேரடி உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கும் திமுக-வின் உயர் மட்டத் தலைமைக்கும் தொடர்புகள் இருந்ததால் தான் தனிப்படை அமைத்து அஜித் குமாரை அடித்தும், துன்புறுத்தியும் விசாரிக்க உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டதா?
- அஜித்குமாரை காவலர்கள் துன்புறுத்துவதை நேரில் கண்டு காணொளியாக படம்பிடித்த முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். யார் இவரை அச்சுறுத்துகிறார்கள்?
- FIR பதிவு செய்யாமலேயே தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்தத் தலைமைச் செயலக அதிகாரியைப் பற்றிய தகவல்கள் இன்னும் அரசு வெளியிடாதது ஏன்?
அஜித்குமாரின் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், வெறும் ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டும் இழப்பீடு வழங்கிவிட்டும் அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என்று பதிவிட்டுள்ளார். இதனை பாஜகவினர் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications