ஜஸ்ட் மிஸ்.. கொஞ்சமும் எதிர்பார்க்கல.. பாஜகவுக்கு ஜெர்க் தந்து லிஸ்ட் வெளியிட்ட அதிமுக.. என்னாகும்?
அதிமுக மீது பாஜகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக வேட்பாளர் லிஸ்ட்டை அறிவித்தது பாஜகவுக்கு அதிருப்தியை தந்துள்ளதாம்.. இதையடுத்து, உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட இப்போதைக்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்காக தமிழக கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. தனித்து போட்டியா? கூட்டணியா? என்ற பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

தலைவர்கள்
இதில், திமுகவில் மாவட்ட அளவிலேயே பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதால், மாவட்ட செயலாளர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டணிக் கட்சி தலைவர்கள், தங்களுக்கு செல்வாக்கான இடங்களை கேட்டு பெற்றனர்.

பாஜக
அதேபோல, அதிமுக தரப்பில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக மாஜி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்... இந்தக் குழுவினர்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை முடிவு செய்தனர்.. இதில், பாஜக சார்பில் பேச்சுவார்த்தை குழுவில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், ஜி.கே.எஸ்.செல்வகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வேட்பாளர் லிஸ்ட்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றுதான் கடைசி என்றபோதிலும், அதிமுக - பாஜக கூட்டணியில் இடங்களை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. காரணம், அவர்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள பல இடங்களை பாஜகவுக்கு ஒதுக்குவதற்கு தயக்கம் காட்டியதாக செய்திகள் கசிந்தன.. ஆனால் அதற்குள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லிஸ்ட்டை அதிமுக வெளியிட்டுவிட்டது..

அதிருப்தி
பேச்சுவார்த்தை முடியும் முன்பே, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, வேட்பாளர் லிஸ்ட்டை அதிமுக வெளியிட்டதை கூட்டணி கட்சியினர் எதிர்பார்க்கவில்லை.. இது பாஜகவுக்கு சற்று அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, தாங்கள் கேட்ட இடங்களை தராமல், அவர்கள் ஒதுக்கும் இடங்களில் தங்களை போட்டியிடும்படி வற்புறுத்துவதால் பாஜகவினர் மேலும் அதிருப்தி அடைந்து வருவதாக கூறப்படுகிறது...

நிர்வாகிகள்
பாஜகவுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்து விட்டே, அதிமுக தன்னுடைய வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளதாகவும் தொடர்ந்து பேச போதிய அவகாசமும் இல்லை என்பதால் பாஜக கையை பிசைந்து வருகிறதாம்.. இதனால், வேறு வழியில்லாமல் உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட பாஜக இப்போதைக்கு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

கள்ளக்குறிச்சி
ஆனாலும் கள்ளக்குறிச்சியை பாஜகவினர் விடாமல் கேட்டபோதும், அது தங்களுக்கு சாதகமான வார்டுகள் என்று அதிமுக தரப்பு திட்டவட்டமாக சொல்லிவிட்டதாம்.. அதனால் அங்கு பாஜக தனித்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை... ஆனால், பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்ள நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை பாஜக பெரிதும் நம்பி வருவதாக கூறப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications