"சீனுக்கு" வந்து ஒரு நாள் கூட ஆகல.. "அண்ணாமலையே".. பாஜகவினரால் பரபரப்பு .. வேறெங்க.. கரூரில்தான்!
அண்ணாமலைக்கு ஆதரவாக கரூரில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதையடுத்து, கரூர் பாஜகவினர் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நயினார் நாகேந்திரன்தான் அடுத்த பாஜக மாநில தலைவர் என்று தகவல்கள் வலம்வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அண்ணாமலை பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
நயினார் மட்டுமல்ல, எச்.ராஜா, பொன்.ராதா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற ஜாம்பவான்களே, இந்த பதவி நமக்கு வருமா என்று காலங்காலமாக காத்து கிடந்த நிலையில், அண்ணாமலைக்கு பதவி தந்துள்ளது பாஜக மேலிடம்.

குத்தாட்டம்
இதனால், அண்ணாமலை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து கரூரில் நேற்று அவருடைய ஆதரவாளர்கள் சிறப்பாக கொண்டாடினர்... பஸ் ஸ்டாண்டுகளில் அனைவருக்கும் ஸ்வீட் வாங்கி தந்தனர்.. பட்டாசுகள் வெடித்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.. அதற்குள் டக்கென போலீசார் வந்துவிட்டனர்.. "யாரை கேட்டு இந்த கொண்டாட்டம் நடத்தறீங்க? அனுமதி இல்லாமல், கொண்டாட்டம் நடைபெறக் கூடாது" என்று தடுத்தனர்.. இதனால், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அறிவிப்பு
பிறகு, அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடியதற்காக அண்ணாமலை ஆதரவாளர்களை கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர்... ஆனால் கைதாகாமல் பாஜகவினர் தகராறு செய்ததால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... கடைசியில் அவர்களை எல்லாம் ஜீப்பில் ஏற்றி கொண்டு போனது போலீஸ்..
பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலை
இப்போது இன்னொரு சம்பவத்தையும் இதே கரூர் பாஜகவினர் செய்துள்ளனர்.. "அண்ணாமலை நாளைய முதல்வரே" என்று வாழ்த்தி போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.. அந்த போஸ்டரில் அண்ணாமலையின் பெரிய சைஸ் போட்டோ உள்ளது.. அதுக்கு பக்கத்திலேயே பெரிய சைஸில் மோடி போட்டோ இருக்கிறது.. அவ்வளவுதான், மத்திய அமைச்சர் எல்.முருகன், அமித்ஷா எல்லாரும் குட்டி குட்டி சைஸில் அந்த போஸ்டரில் ஒரு ஓரமாக உள்ளனர்.

கருத்துக்கள்
இந்த போஸ்டரை பார்த்து சோஷியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. "எல்லாம் சரிதான்.. ஓட்டு போட்டால்தான் முதல்வராக முடியும்.. இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆண்டவா, என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைகள்? என்றும் "போஸ்டர்ல போடறதுக்கு என்ன கஞ்சத்தனம்? பிரதமரேன்னு போட்டிருக்கலாமில்லே?" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அண்ணாமலை பதவியேற்ற முதல் நாளே, இந்த சம்பவங்களை நிகழ்த்தி காட்டி உள்ளது கரூர் பாஜக.!
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications