அப்படியே தரையில் அமர்ந்த வானதி சீனிவாசன்.. "பிரதமர் நல்லா இருக்கனும்.." மனமுருகி பிரார்த்தனை!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் ஆயுளுக்கும், பாதுகாப்புக்கும் வலுசேர்க்க வானதி சீனிவாசன் தலைமையில் தமிழக பாஜக மகளிர் அணி வழிபாடு செய்து வருகின்றனர்.
பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நடந்த விஷயம் நாடு முழுவதும்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் 20 நிமிடங்கள் மோடி காத்திருக்க நேரிட்டது இதுவரை நடைபெறாத நிகழ்வாகும்.
"விமான நிலையத்திற்கு உயிரோடு செல்ல அனுமதி அளித்ததற்கு நன்றி.." என பிரதமர் கூறியதாக தகவல் வெளியானது. இவ்வாறு பிரதமர் கூறியதற்கு பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

பஞ்சாப் விவசாயிகள்
பிரதமர் இப்படி சொன்னதற்கு அர்த்தமே இல்லையே. அவரது வாகனத்தை அடித்தார்களா, நொறுக்கினார்களா. அப்படியிருக்கும்போது இப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உயிருக்கு ஆபத்து என்பதற்கும், வாகனத்தை தடுத்து நிறுத்தியதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பஞ்சாப் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம், பிரதமர் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

அரசியல் சர்ச்சை
பிரதமர் மோடியின் பாதுகாப்பில், பஞ்சாப் மாநில அரசு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பினார் மோடி. இந்த நிகழ்வு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பா.ஜ.க மகளிர் அணி சார்பாக சிவன் கோயில்களில் மிருத்தியுஞ்சய ஜெபம் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க இளைஞரணி சார்பாக மெழுகுவர்த்தி ஊர்வலமும் நடைபெற்று வருகிறது.

வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு
தமிழ்நாடு பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனின், எம்.எல்.ஏ தலைமையில், மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் முன்னிலையில் மகளிர் அணி சார்பாக மிருத்தியுஞ்சய ஜெபம் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. சுவாமி தரிசனம் செய்த பின்னர், அங்கிருந்த பசுக்களுக்கு பசும்புல் வழங்கினார்.

பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி, அரசு நிகழ்ச்சிக்காக பஞ்சாப் செல்லும் வழியில் தடுக்கப்பட்டார். வாகனங்கள் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. நம்முடைய பிரதமருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் பஞ்சாப் மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பஞ்சாப் மாநில அரசுதான் முழுமையான காரணம். இந்த செயலை கண்டிக்கும் வகையில் மோடியின் ஆயுளுக்கும், பாதுகாப்புக்கும் வலு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக சிவன் கோவில்களில் மிருத்தியுஞ்சய ஜெபம் மற்றும் தமிழக பாஜக இளைஞரணி சார்பாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறுவதாக பா.ஜ.க-வினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications