'பெரியார் அவர்கள்' .. மூச்சுவிடாமல் உச்சரித்த அண்ணாமலை! பெரியார் சிலைகள் அகற்றம் ஏன் என விளக்கம்!
சென்னை: ஶ்ரீரங்கம் கோவில் முன்பாக உள்ள தந்தை பெரியார் சிலை அகற்றப்பட வேண்டும் என்ற தமது கருத்து குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பெரியார் அவர்களைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதை தொடர்ந்து நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம். பெரியார் அவர்கள் எத்தனையோ விஷயங்களுக்காக குரல் கொடுத்திருக்காங்க.. சமூக அநீதிகளுக்கு எதிர்த்து போராடி இருக்காங்க.. அதில் மாற்று கருத்து இல்லை. ஆக பெரியார் அவர்களைப் பற்றிய எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு முன்பிருந்த தலைவர்களும் பேசினார்கள்.
மக்கள் ஏற்கவில்லை: இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரையில் மக்கள் புதுசா பேச ஆரம்பிச்சிருக்காங்க. புது பார்வையில் பார்க்கிறாங்க. உதாரணத்துக்கு ஒரு முக்கியமான கோவிலுக்கு வெளியே போறீங்க.. அதுல கடவுள் இல்லவே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்புவன் அயோக்கியன் அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தினீங்கன்னா அதை இன்றைக்கு தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
பெரியார் சிலை எங்கே இருக்கனும்?: சோ எங்களைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மக்கள் முன்னாடி ஒரு ஆர்கியூமென்ட்டாக வைக்கிறோம். மக்கள் முன்னாடி பாரதிய ஜனதா கட்சி நிலைப்பாட்டை வைக்கிறோம். 2026-ல் நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் போது அந்த வாசகங்கள் அங்கே இருக்காது என்கிறோம். அப்ப பெரியார் சிலையை என்ன செய்வீர்கள் என திமுக தலைவர்கள் கேட்கிறார்கள். பெரியார் அவர்களைப் பொறுத்தவரை பெரியார் சிலை எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்க வேண்டும். ஒரு பொது இடத்தில், எல்லா தலைவர்களும் எங்கே இருக்கிறார்களோ எல்லா தலைவர்களுக்கும் கொடுக்கக் கூடிய கவுரவம் எல்லா தலைவர்களுக்கும் இருக்கும். பொது இடத்தில் அந்த சிலைகள் இருக்கும். எந்த சிலையையும் யாரும் சேதப்படுத்துவது கிடையாது. அந்த சிலைக்கு என்ன மரியாதை கொடுக்கனுமோ அந்த மரியாதை பாரதிய ஜனதா கட்சி கொடுக்கும். எல்லா தலைவர்களையும் அனைவரும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
இதை செய்வாங்களா கட்சிகள்?: திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நிரைய அறிக்கைகள் கொடுத்திருக்காங்க. இப்ப ஒரு விவாதத்துக்கு மூத்த பத்திரிகையாளர், தத்துவார்த்தவாதி சோ சொன்ன கருத்தை முன்வைக்கிறேன். பெரியார் அவர்கள் இந்துமதத்துக்கு எதிராக சொன்ன கருத்தை கோவிலுக்கு வெளியே வைக்கலாம் என அரசியல் கட்சிகள் சப்போர்ட் செய்தால், பெரியார் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக சொன்ன கருத்தை கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீசுக்கு வெளியே வைக்கலாமா? இவர்களுக்கு ஒரு நியாயம்.. இந்துக் கோவில்களுக்கு ஒரு நியாயம் கிடையாது.
திமுக, கம்யூனிஸ்டுகளுக்கு கேள்வி: பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். அதனை நான் சொல்ல விரும்பவில்லை. சோ அவர்கள் சொன்ன கருத்தை கூகுள் பண்ணி பார்த்தா தெரியும். அதேபோல திமுக பற்றி 'பக்கம் 21'-ல் சொன்னதை திமுக அலுவலகத்துக்கு வெளியே வைப்போம். காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும் என பெரியார் சொன்னதை காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே வைப்போம். அதை இந்த கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா?

பெரியாரை அவமதிக்கவில்லை: பாரதிய ஜனதா கட்சி பெரியாரை எங்கேயும் அவமதிக்கவில்லை. பெரியார் அவர்கள் எங்க இருக்க வேண்டுமோ பெரியார் அவர்களுக்கு என்ன கவுரவம் கொடுக்கப்பட வேண்டுமோ அதை கொடுப்போம். அதே நேரத்தில் கோவிலுக்கு வெளியே, கோவிலுக்கு மனிதர்கள் செல்லக் கூடிய வழியில் கோவில் கோபுரத்தின் 50, 100 மீட்டருக்குள் அந்த வாசகங்கள் அகற்றப்பட வேண்டும் என்பது மக்கள் கருத்து. அதனை பாரதிய ஜனதா கட்சி புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் அவர்களை யாருமே தரம் குறைத்து பேசவில்லை. பெரியார் அவர்களை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. பெரியார் அவர்களுக்கு என்ன கவுரவம் கொடுக்கப்பட வேண்டுமோ நிச்சயம் கொடுக்கனும். பொது இடத்தில் அந்த சிலைகள் இருக்க வேண்டும். பெரியார் சொல்கிற கருத்துகளை சார்ந்து யாராவது இயக்கம் நடத்துகிறார்கள் எனில் அங்க இருக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே இருக்கக் கூடாது என்பதைத்தான் ஶ்ரீரங்கத்தில் பிரகடனமாக வெளியிட்டோம். இதனை மற்ற அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். நம்ம சொன்ன கருத்துகளை திரித்து.. அதே மாதிரி அரசியல் கட்சிகளுக்கு நாங்க சவால் விடுகிறோம்.
தேவாலயம், மசூதிக்கு வெளியே வைப்பீர்களா?: பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சமமாக இருக்கக் கூடிய கட்சி. இந்த வார்த்தைகளை ஒரு மசூதிக்கு வெளியே வைக்க கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா? தேவாலாயத்துக்கு வெளியே வைக்க ஒப்புக் கொள்வார்களா? பெரியார் அவர்கள் எங்கே இருக்கனுமோ அங்கே உயரிய கவுரவத்தோடு அங்கே பெரியாரை அங்கே வைக்கலாம். கோவிலுக்கு வெளியே வேண்டாம் என்ற மக்கள் கருத்தை நாங்கள் பிரதிபலிக்கிறோம். அதை எங்கள் அரசியல் பிரகடனம் வைக்கமாக வைக்கிறோம். இதில் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications