அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி... உடனே போன் போட்ட அண்ணாமலை! ஓ இதான் மேட்டரா
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுக்குழுவின் 16 தீர்மானங்களில் 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். மீதமுள்ள 8 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் படித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தீர்மானங்களை முன்மொழிந்தார். ஓ.பி.எஸுக்கு பதிலாக கட்சி வரவு செலவு கணக்கை சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாசித்தார்.

அன்புமணி வாழ்த்து
இந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் என்ற புதிய பதவியும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அண்ணாமலை வாழ்த்து
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு பாதியோடு கைவிடப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்ததார். இந்த நிலையில் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.
-
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications