'பன்றி பசுவாக மாற முடியாது' ' ஓசி சோறு' - கி.வீரமணியின் ஆர்எஸ்எஸ் விமர்சனத்துக்கு தமிழக பாஜக ரிப்ளை
சென்னை: ஜாதி, வருணம் ஆகியவற்றை மறக்க வேண்டும் என பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு ஓநாய் சைவமாக முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பதிலடி தந்தார். ஆனால் பன்றி பசுவாக முடியாது என கி.வீரமணிக்கு தமிழக பாஜக பதில் அளித்துள்ளது.

கி.வீரமணி இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்று தொடர்ந்து ''கோரஸ்'' பாடும் ''ஒரே, ஒரே'' வரிசையில், ஏன் உடனடியாக தற்போதுள்ள புல்டோசர் மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசு ''இனி ஒரே ஜாதிதான்'' என்ற ஒரு அவசரச் சட்டத்தையோ அல்லது நாடாளுமன்றம்மூலம் தனிச் சட்டத்தையோ கொண்டு வந்து நிறைவேற்றிட முன்வந்து, எங்களது குரல் உண்மையான கொள்கை நிலைப்பாடு மாற்றமே தவிர, வெறும் உதட்டளவிலான உருமாற்ற உச்சரிப்பல்ல - என்பதை உலகுக்கு உணர்த்திட முன்வரலாமே ஆர்.எஸ்.எஸ். செய்யுமா? - இந்த இரண்டை நிறைவேற்ற இப்போது அவர்களுக்கு எது தேவை? ''ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ'', அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ''அதிசயம், அற்புதத்தை'' நிகழ்த்த முடியும். எனவே, உருமாற்ற வித்தைகளைக் கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை. மாற்றம் வேறு; ஏமாற்றம் வேறு என்பதைப் புரிந்தவர்கள்தான் இன்றைய இளைஞர்கள். 2024 இல் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களே இதனை நினைவில் நிறுத்துங்கள் என கூறியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அளித்துள்ள பதில்: தற்குமுன் இருந்த பல முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைவிட மிகவும் கைதேர்ந்த சாணக்கியப் பார்ப்பனர்! திடீரென்று டில்லியில் இமாமை சந்திப்பார்; இஸ்லாமியர்களை வெறுப்பதல்ல எங்கள் அமைப்பு என்று வெறுப்பு அரசியல் குடியுரிமைச் சட்டங்களை மூடி மறைத்து அதன்மீதே அமர்ந்துகொண்டு புதிய( வித்தை காட்டுவார், இனி ஒரே ஜாதி தான் என்ற சட்டத்தை நிறைவேற்ற முடியுமா? ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ'', அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ''அதிசயம், அற்புதத்தை'' நிகழ்த்த முடியும். - கி.வீரமணி.
நான் பாப்பாத்தி தான்' என்று தைரியமாக முழங்கிய செல்வி.ஜெயலலிதாவிற்கு அஞ்சி, நடுங்கி, பதைபதைத்து, உருண்டோடி சென்று 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் சூட்டி தாஜா செய்த சந்தர்ப்பவாத வீரமணி ஒரு அயோக்கியர்.ஆட்சியில் இருப்பவர்களை அண்டிப்பிழைக்கும் கேடுகெட்ட அரசியல் பிழைப்பை நடத்தி வரும் வீரமணிக்கு ஆர் எஸ் எஸ் குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ பேசுவதற்கு தகுதியில்லை. தி மு க தலைவர் கருணாதியின் மகனும், இன்றைய முதல்வரின் சகோதரரின் மகனுமான மு.க.அழகிரியின் மகனால் 'ஓசி சோறு வீரமணி' என்று அழைக்கப்பட்டவர், ஆர் எஸ் எஸ் குறித்து பேசுவதா? ஓநாய் சைவமாகிறதோ இல்லையோ, பன்றி பசுவாக மாற முடியாது. இவ்வாறு பாஜக துணைத் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications