தேர்தல் பணத்தை பதுக்கி வீடு கட்டும் விவகாரம்- எச். ராஜா மீதான புகார் குறித்து விசாரணை: எல். முருகன்
சென்னை: தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை பதுக்கி பாஜக முன்னாள் தேசிய செயலாளர் பங்களா கட்டி வருவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில்தான் வென்றது. அதிமுக கூட்டணியில் இருந்ததால்தான் இந்த வெற்றியும் பா.ஜ.க.வுக்கு சாதகமானது.

எச். ராஜா தோல்வி
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தோல்வி அடைந்தார். தமது தோல்வி தொடர்பாக பேசிய எச்.ராஜா, பாஜக நிர்வாகிகள் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.

எச்.ராஜாவுக்கு எதிராக ராஜினாமா
ஆனால் எச். ராஜாவின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினர். இது பா.ஜ.க.வில் பெரும் சர்ச்சையானது.

பணம் பதுக்கியதாக புகார்
அத்துடன் சட்டசபை தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தில் ரூ4 கோடியை எச். ராஜா பதுக்கி தற்போது பங்களா கட்டி வருகிறார் என்றும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரித்து எச். ராஜா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

டெல்லி மேலிடம் கடும் அதிருப்தி
ஏற்கனவே சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழக தலைவர்கள் மீது டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. பெரும்பாலான இடங்களில் கட்சி நிர்வாகிகள் பிற கட்சிகளிடம் விலை போய்விட்டனர் என்கிற கோபமும் பாஜக மேலிடத்தில் இருந்து வருகிறது.

எச். ராஜா மீதான புகார் குறித்து விசாரணை
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் எச். ராஜா மீதான ரூ4 கோடி பணம் பதுக்கல் புகார்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முருகன், இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எல்.முருகனின் இந்த கருத்து பா.ஜ.க.வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications