Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 3 இடங்களுக்கு குறி.. மாஸ்டர் பிளானில் பாஜக.. அண்ணாமலையின் அதிரடி நாளை முதல் துவக்கம்..!

உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருகிறது.. ஒரு மேயர், 10 நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர் பதவிகளை பிடிக்க பாஜக சார்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம்..!
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க தீவிரமான முயற்சிகளை பாஜக முன்னெடுத்து வருகிறது.. எல்.முருகன் தலைமையில் சட்டமன்றத்திற்குள் பாஜக மறுபடியும் காலடி எடுத்து வைக்கும் சூழல் உருவானது..

Recommended Video

    திமுக அரசின் முடிவை வரவேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாலை.. அரசுக்கு வைத்த புதுக்கோரிக்கை

    இதற்கு பிறகு அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    மாவட்டம்

    மாவட்டம்

    அதற்காக வரும் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தப்படுகிறது.. வரும் செப்டம்பர் மாதம் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலும், டிசம்பரில் அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளன... இந்த தேர்தலில் ஒரு மேயர், 10 நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர் பதவிகளை பிடிக்க பாஜக சார்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம்.

    பதவிகள்

    பதவிகள்

    இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இத்தனை பதவிகளையும் அள்ள பாஜக தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.. அதிமுகவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தலைதூக்கி உள்ள நிலையில், அதுவும் எடப்பாடி பழனிசாமியே கொடநாடு விவகாரத்தில் சிக்கி வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தனித்து போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்..

     பாஜக

    பாஜக

    அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தான் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாகவே சிவி சண்முகம் சொன்னதை பாஜக இன்னமும் மறக்கவில்லை என்றே தெரிகிறது.. அந்த கோபம் இப்போதுவரை பாஜக மூத்த தலைவர்களுக்கு இருக்கவே செய்கிறது.. உங்களால்தான் எங்களுக்கு தோல்வி என்று ஒருசில பதிலடி தந்தாலும், கோபம் என்னவோ அதிமுக மேலிடம் மீது பாஜகவுக்கு இருந்து வருகிறது..

    அண்ணாமலை

    அண்ணாமலை

    அதனால்தான், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில்கூட அதிமுகவை பாஜக மேலிடம் கைகழுவி விட்டதாக கூறப்பட்டது.. இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை கண்டுகொள்ளாமல், பாஜக தன் வேலைகளில் மும்முரமாகி உள்ளது.. ஏற்கனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இத்தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனிக்குழுவை அறிவித்திருந்தார்.. அதுமட்டுமல்ல, ஒருவேளை அதிமுக கூட்டணியில் தொடர்ந்தால் கோவை, திருப்பூர், நாகர்கோவில் ஆகிய 3 மாநகராட்சிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப்பெறும் எண்ணத்திலும் உள்ளது தமிழக பாஜக...

    கூட்டங்கள்

    கூட்டங்கள்

    ஆனால், கோவையை அதிமுக விட்டுக்கொடுக்காவிட்டால் திருப்பூர் மற்றும் நாகர்கோவிலில் போட்டியிட பாஜக தீவிரம் காட்டுவதாகவும் தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய சுற்றுப்பயணத்தை துவங்கி உள்ளார். நாளை முதல் மாவட்டம் வாரியாக இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. அந்தந்த மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம், பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல், கட்சி நிர்வாகிகள் வீட்டிற்கு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

    நினைவிடம்

    நினைவிடம்

    முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்திற்கு நாளை வரும் அண்ணாமலை காலை 10 மணிக்கு பாவூர்சத்திரத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்திலும், பிற்பகல் 12 மணிக்கு தென்காசியில் நடைபெறும் சமுதாய தலைவர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். மாலை 4 மணிக்கு சங்கரன் கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஆடிட்டோரியத்தில் மாணவ- மாணவிகளை சந்திக்கிறார். மாலை 7 மணிக்கு சங்கரன்கோவில் கிளை பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    பங்கேற்பு

    பங்கேற்பு

    மறுநாள்(2-ந்தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி 3-ம் மைல் அருகில் நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்... நண்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி நகரில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு கூட்டத்திலும், காமராஜர் கல்லூரியில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பு கூட்டத்திலும் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

     நயினார் நாகேந்திரன்

    நயினார் நாகேந்திரன்

    தொடர்ந்து 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நெல்லை வரும் அண்ணாமலை வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துகிறார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

     பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    தொடர்ந்து அண்ணாமலை விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.6-ந்தேதி தருமபுரியிலும், 11-ந்தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல்சேகரன் பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொள்கிறார்.14-ந்தேதி கள்ளக்குறிச்சியிலும், 15-ந்தேதி மயிலாடுதுறையிலும், 16-ந்தேதி விழுப்புரத்திலும், 17 மற்றும் 18-ந்தேதிகளில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

    பாஜக

    பாஜக

    பின்னர் 19-ந்தேதி வடசென்னை கிழக்கு, 20-ந்தேதி திருவாரூர், 22-ந்தேதி மதுரை புறநகர், 24-ந்தேதி சென்னை மேற்கு, 26-ந்தேதி கன்னியாகுமரி, 27-ந்தேதி சிவகங்கை, 28-ந்தேதி திண்டுக்கல் மேற்கு மாவட்டம், 29-ந்தேதி கோவை தெற்கு என மாவட்டம் தோறும் செயல்வீரர்கள் கூட்டம், சமுதாய தலைவர்கள் சந்திப்பு என கூட்டங்கள் நடைபெற உள்ளது... இந்த கூட்டங்கள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு பலத்தை பெற்று தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+