லாஸ்ட் மினிட்ல "எகிறிய" பிரபலம்.. மிஞ்சினதே இவர்தான்.. தூண்டிலை விரித்த அதிமுக.. ஜரூரா ரெடியான பாஜக.
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும்சூழலில், அதிமுக படுவேகத்தில் குதித்துள்ளது.. மற்ற கட்சிகளிலுள்ள அதிருப்தியாளர்களுக்கும் "வலையை" விரித்துள்ளதாம்.
அதிமுகவுள்ளிருக்கும் ஆதரவாளர்களை, தூண்டில் போட்டு இழுக்க வேண்டும் என்று தமிழக பாஜகவில் உள்ள சில சீனியர்களுக்கு அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம்..

பாஜக குறி: காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் உள்ளவர்கள் + பாஜகவிடம் நெருக்கமாக உள்ளவர்கள் + ஒற்றை தலைமையை விரும்பாதவர்கள் என இப்படி பல நிர்வாகிகள் அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, "மடியில் கனம்" உள்ளவர்களும் அதிமுகவில் உள்ளதால், பாஜகவின் குறி எந்நேரமும் தங்கள் மீது விழும் என்று அவர்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்குதான், தமிழக பாஜக முதலில் தன்னுடைய தூண்டிலை வீசியிருப்பதாக சொல்கிறார்கள்.
சிக்குவார்களா?: பாஜகவில் இப்படியென்றால், அதிமுகவோ அதற்கு மேல் ஸ்பீடாக உள்ளது.. பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க அதிமுகவில் தூண்டில் போடப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமமுகவை சேர்ந்த தலைமை நிலைய செயலாளர் ஐ.மகேந்திரன் அதிமுகவில் இணைந்த நிலையில், நேற்றைய தினமும் பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத்தலைவர் அஷோக் குமார், அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.. இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லையாம்..
அதிமுகவில் இணைந்திருக்கும் அசோக் குமார், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருகனும், முன்னாள் எம்பி டாக்டர் சவுந்தரத்தின் மகன் என்பதால், பாஜகவுக்கு இது கூடுதல் அதிர்ச்சியை தந்துள்ளது.
பாஜக மேலிடம்: அதாவது, சமீபத்தில் தமிழக பாஜக தலைமையுடன் முரண்பட்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியமாகி உள்ளவர்தான், இப்படி ஒரு ஆட்டத்தை துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள்..
தமிழக பாஜகவில் இருந்தபோது, வலிமையான பொறுப்பில் அவர் இருந்தவர் என்பதால், இப்போதுவரை கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகளுடன் அவர் தொடர்பில்தான் இருந்து வருகிறாராம். எனவே, அதிமுக பக்கம், அவர்களை இழுத்து கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
தேர்தல் சமயத்தில் இப்படியான கட்சி தாவல்கள் நடப்பது இயல்பான ஒன்று என்றாலும், வேண்டுமென்றே பாஜகவையே குறித்து அதிமுக செயல்பட்டு வருவது, கடுப்பை தந்துள்ளதாம். ஏற்கனவே, கூட்டணியில் இருந்தபோதும் அதிமுகவில் இப்படித்தான் செய்தார்கள், கூட்டணியை முறித்தபோதும் இப்படித்தான் செய்கிறார்கள் என்று, எரிச்சலடைந்துள்ளதாம் பாஜக.
திருச்சி சிவா: அதனால்தான், அதிமுகவுக்கு செல்லும் எண்ணத்திலிருப்பவர்கள் யார் யார் என்று மோப்பம் பிடித்து, அவர்களை தடுக்கும் முயற்சிகளிலும் இறங்கி வருகிறதாம். இப்படி தடுக்கப்பட்டவர்களில், ஒருவர்தான் சூர்ய சிவா.
திருச்சி சூர்யா, அதிமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியான உடனேயே, ஒரேநாளில் அவரை அழைத்து போஸ்டிங் தந்து, விவகாரத்தை முடித்துகொண்ட பின்னணியும் இதுதானாம்..
எனினும் மாவட்ட வாரியாகவும், அதிமுகவின் தூண்டில் விரிவடைவதால், பாஜக அலர்ட்டாகி உள்ளதாம். இன்னும் வேறு யாரெல்லாம் அதிமுக தரப்பில் தொடர்பில் உள்ளார்கள் என்று ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்..!!
சைலண்ட் மூவ்: ஏற்கனவே, அடுத்தடுத்த பின்னடைவை ஓபிஎஸ் சந்தித்து வருவதால், அவரிடமுள்ள ஆதரவாளர்கள் பலர் அப்செட்டில் உள்ளதாக சொல்கிறார்கள்.. இவர்களில் பலரை, அதிமுகவுக்கு கொண்டு வரும் முயற்சியும் சைலண்ட்டாக நடக்கிறதாம். இதற்கு நடுவில், பாஜக, அமமுக என நாலாபக்கமும் அதிமுகவின் வலை வீசப்பட்டுள்ளதாம்.. இதில் சிக்கப்போவது யார் யார் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications