அளவில் சிறுத்து! ஊட்டத்தில் பெருத்து! உடலை உறுதியாக்கும் சிறுதானியம்.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
சென்னை: சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
Recommended Video
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை அமலானது. அதன் படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மூலம் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய இரு மாநிலங்களுக்கு பிறகு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 3-ஆவது மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

வேளாண் பட்ஜெட்
அதன்படி 2022- 2023 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழகத்தில் பொது பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறைக்கான பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

விவசாய சங்கம்
விவசாய அமைப்புகள், விவசாய சங்கங்களிடம் கருத்து கேட்ட நிலையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசுகையில், வேளாண்மையை உச்சத்திற்கு அழைத்துச்செல்ல இந்த நிலை அறிக்கையின் திட்டங்கள் உதவும். வேளாண் பட்ஜெட் கடந்த ஆண்டு குழந்தையாக பிறந்து இந்த ஆண்டு நடந்து அடுத்த ஆண்டுகளில் ஓடும்.

80 அறிவிப்புகள்
கடந்த ஆண்டு 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. உழைக்கும் மக்களின் திறனை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தார்பாய்கள் வாங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது. விவசாயிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தால் வேளாண் உற்பத்தி பாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கம் உணரப்படுகிறது. தமிழகத்தில் வேளாண் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அளவில் சிறுத்து ஊட்டத்தில் பெருத்து உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். அவற்றை வழிமொழியும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

சிறுதானிய மண்டலங்கள்
சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டம் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்படும். சிறுதானிய ஊட்டச் சத்துகள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள் தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் பங்கேற்கும் சிறுதானிய திருவிழா மாநில மாவட்ட அளவில் நடத்தப்படும். சாகுபடி முதல் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது வரை அனைத்து உதவிகளையும் ஒரு சேர வழங்கிடும் வகையில் 2022- 2023 ஆம் ஆண்டில் 92 கோடி ரூபாய் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி, சிறுதானிய உணவு ஆகியவற்றை சுய உதவிக் குழு மகளிரிடையே ஊக்குவிக்கும் வகையில் 500 குறு விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications