குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை.. அறிய வேண்டிய முக்கியமான விஷயம்.. சூட்சுமம் என்ன?
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு மகிழ்ச்சி அளித்திருக்கும். இல்லதரசிகளுக்கான அந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள சில முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்து பேசும் போது என்ன கூறினார் என்பது பாருங்கள்.
"மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண்,நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை, இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் எனறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

உரிமை தொகை
அதன் அடிப்படையில் "தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது" என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

செப் 15 முதல் 1000
வரலாற்று சிறப்பு மிக்க இந்தத்திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திரவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில் தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்காநன வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

1000 எப்போது கிடைக்கும்
பிடிஆரின் கூற்றுப்படி பார்த்தால், இந்த நிதியாண்டில் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆறுமாதத்திற்கு ரூ.7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆறு மாதத்திற்கு பிறகே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

நம்ப வேண்டாம்
இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று அரசு கூறியிருக்கிறது. அதன்படி பார்த்தால், இதுவரை அரசு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் ரூ.1000 பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை வெளியிடவில்லை. இதில் பல ஊகமான தகவல்கள் வருகின்றன. அவற்றை எதையும் நம்ப வேண்டாம். இந்தரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் கிடைக்கும், இவர்களுக்கு கிடைக்காது என்றொல்லாம் பரவும் தகவல்கள் உறுதியானது அல்ல.

ஆதார் எண் வங்கி கணக்கு
அதேநேரம் நிச்சயம் பொருளாதா அளவுகோல் இத்திட்டத்தில் இருக்கும் என்பதை வெளிப்படையாகவே பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் அறிவிப்பில் தெரிகிறது. மகளிர்கள் அனைருக்கும் இல்லை என்றாலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைருக்கும் நிச்சயம் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த தொகை மாதம் மாதம் வங்கி கணக்கில் செலுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது . எனவே ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை இதற்கு கேட்க வாய்ப்பு உள்ளது.

1.16 கோடி பேருக்கு
7000 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.இதை வைத்து 2 கோடி ரேஷன் கார்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட முடியாது. ஆனால் அதேநேரம். ஆறு மாதத்திற்கு தான் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால், இந்த தொகையில், 7 கோடி பேருக்கு ஒரே தவணையாக ஆயிரம் கொடுத்துவிட முடியும். அதேநேரம் 6 மாதத்திற்கு கணக்கிட்டால் சுமார் ஒரு கோடியே 16 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொடுத்துவிட முடியும். கிட்டத்தட்ட பாதிக்கு பாதிப்பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கவர்ச்சி அறிவிப்புகள்
அதேநேரம் அடுத்த நிதியாண்டில் இந்த தொகை 14 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உயர்த்தப்பட்டால் தான் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை கொடுக்க முடியும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நிச்சயமாக பல கவர்ச்சிகரமாக அறிவிப்புகள் அடுத்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

ஆயிரம் கிடைக்குமா
எனவே 1000 உதவித்தொகை என்பது ரேஷன் அட்டை வைத்துள்ள சுமார் 50 சதவீதம் பேருக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதை கணக்கிட்டே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படிப்பட்ட நிபந்தனைகள் இந்த ஆயிரம் ரூபாய் வாங்க விதிக்கப்படும் என்பதை பொறுந்திருந்தே பார்க்க வேண்டும். அதுவரை ஊகத்தில் வரும் தகவல்களை நம்பி குழப்பிக் கொள்ள வேண்டாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications