புதிய அமைச்சர் ஆகிறார் டிஆர்பி ராஜா.. அமைச்சர் நாசர் பதவி பறிப்பு.. அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இந்த தகவல் இன்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏவும், டி.ஆர்.பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு ஆளுநருக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்பதற்கான ஒப்புதலை அளுநர் அளித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரின் பதவியேற்பு விழா வரும் மே 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராஜ்பவனில் உள்ள தர்மார் ஹாலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசர் நீக்கம் : மேலும் அமைச்சரவை குழுவில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. புதிய அமைச்சர் பதவியேற்புக்கு பின்னர் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.

டிஆர்பி ராஜா : திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகனும், மூன்று முறை மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில், டி.ஆர்.பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் அமைச்சர்களின் துறைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதே தவிர இதுவரை ஒரு அமைச்சர் கூட அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
ஆனால் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுகிறார். 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் முதல் நபராக அமைச்சர் பதவியை இழக்கிறார் ஆவடி நாசர். ஆவின் பால் விவகாரம், பல்வேறு சர்ச்சைகள் என நாசர் சிக்கிய நிலையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications