பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக சிபிசிஐடி போலீஸ்.. இதுதான் காரணம்!
சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியா முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பலர் வதந்தி, அவதூறு பரப்பி வந்தனர். இது தொடர்பாக தமிழகத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானில் பலர் டுவிட்டரில் பல்வேறு அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர்.
world conflicts monitoring centre @ worldBreakingN9 மற்றும் Pakistan strategle forum @ forumstrategic ஆகிய பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரவப்பட்டது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தகவல்களை பரப்பிய இந்த டுவிட்டர் கணக்குகளின் மீது தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் இராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து ட்விட்டர் கணக்குகளில் (i) World Conflicts Monitoring Centre @ WorldBreakingN9 மற்றும் (ii) Pakistan Strategic Forum @ ForumStrategic தவறான மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வழிவகைச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் சைபர் கிரைம் பிரிவு (CB CID Cyber Crime Wing) வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications