ரங்கராஜ் பாண்டே கையை இறுக்கமாகப் பற்றி உருக்கமாக ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா நேற்று இரவு காலமான நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ரங்கராஜ் பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று இரவு காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பாண்டே தந்தை காலமானார்
சாணக்யா ஊடகத்தின் சி.இ.ஓவும், பத்திரிகையாளருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசாரியா என்ற ராம்சிங்ஹாசன் பாண்டே (84) வயது மூப்பின் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

பிரபலங்கள் அஞ்சலி
மேலும், ராம்சிங்ஹாசன் பாண்டே மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மலர் மாலை அணிவித்து வணங்கி, ரங்கராஜ் பாண்டேவிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் தனது உறவினர்களை ரஜினிகாந்த்திற்கு ரங்கராஜ் பாண்டே அறிமுகமும் செய்து வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
இந்நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தையார் மறைவையடுத்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு ரங்கராஜ் பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஆழ்ந்த இரங்கல்
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "தனது தந்தையார் ரகுநாதாச்சார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே அவர்களை இழந்து வாடும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications