ஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்!
தமிழக நலன் குறித்து, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக நலன்கள் சம்பந்தமான அனைத்து விதமான, பிரச்சனைகள், கோரிக்கைகள், வேண்டுகோள்களை ஏழு நிமிடத்தில் பேசிவிட்டு வந்துள்ளார்!
இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்து பேச போகிறார் என்றதுமே தமிழகம் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது. மோடி 2-வது முறையாக பதவியேற்று, முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது.

இதில், கலந்து கொள்ள நாட்டின் எல்லா மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நம் முதல்வரும் இதில் கலந்துகொள்ள டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றனர்.
இன்று காலை பிரதமரின் இல்லத்தில் மோடியை சந்தித்து பேசினார் முதல்வர். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதிஒதுக்குவது குறித்தும், வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் முதல்வர் வழங்கி உள்ளார்.
மேலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை எடுத்து சொல்லி, காவிரியில் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி தரக்கூடாது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தியதாக தெரிகிறது.
பிரதமருடனான தமிழக முதல்வரின் இந்த சந்திப்பு நடந்தது ஏழு நிமிடங்கள்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அனைத்து தமிழகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க நேரமில்லாமல், மனுவாக தரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நம் மாநிலத்தில் கடுமையான பிரச்சினையாக மாறியிருக்கும் தண்ணீ்ர்ப் பிரச்சினை குறித்து பேசப்பட்டதா என்று தெரியவில்லை.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications