தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தரக் கூடாது.. பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை: தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தரக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன.

அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஶ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துசென்றால் தமிழகத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்.
தமிழகத்துக்கான ஆக்சிஜன் தேவையை முதலில் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்துக்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தவறான கணக்கீடு. தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டால் தமிழகத்துக்கு 310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications