வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. பொறுப்புகளை கவனிப்பது யார்? ஜெயக்குமார் உடைத்த சீக்ரெட்!
நாளை வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது பொறுப்புகளை யாரிடம் ஒப்படைக்க போகிறார் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நாளை வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது பொறுப்புகளை யாரிடம் ஒப்படைக்க போகிறார் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை வெளிநாடு பயணம் செல்கிறார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அவர் செல்கிறார்.
இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இதன் மூலம் தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யப்படும் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாட்டார்
ஆகஸ்ட் 28ம் தேதி முதல்வர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 12ம் தேதி வரை அவர் தமிழகம் வர மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த 14 நாட்கள் முதல்வரின் பொறுப்பை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வரின் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி யாரிடம் கொடுக்க போகிறார் என்று தொடர்ந்து விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

கவனம்
முதல்வர் பொறுப்பை யார் கவனிக்க போவது என்பது குறித்து தற்போது அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், தமிழக அரசில் எப்போதும் போல முக்கிய முடிவுகளை முதல்வர்தான் எடுப்பார். அவரின் துறை சார்ந்த முடிவுகளையும் முதல்வர்தான் எடுப்பார். அரசின் தலைமை நிர்வாக பொறுப்பை வெளிநாடு சென்றாலும் அவரேதான் கவனித்துக் கொள்வார். இதில் மாற்றம் இல்லை.

பொறுப்பு
முதல்வரின் பொறுப்புகளை யாருக்கும் அளிக்கவில்லை. வெளிநாடு சென்றாலும் முதல்வரே முக்கிய முடிவுகளை எடுப்பார். இதற்கு முன்பே முதல்வர்கள் வெளிநாடு பயணம் செய்த போதும் இப்படித்தான் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு உள்ளது, என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

நீடிக்கும்
இதன் மூலம் அதிமுகவில் இத்தனை நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தீர்ந்து உள்ளது. முதல்வர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற குழப்பம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. எப்போதும் போல முதல்வரின் பொறுப்புகளை அவரே கவனிப்பார், வேறு யாரும் அதில் தலையிட மாட்டார்கள் என்று உறுதியாகி உள்ளது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications