தைரியமா இருங்க.. போன் செய்து ஆறுதலாக பேசிய ஸ்டாலின்.. பெருமையா இருக்கு.. கண்ணீர்விட்ட சீமான்
சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டத்தில் இன்று இயற்கை எய்தினார். வயது முதிர்வினால் செந்தமிழன் இன்று காலை காலமானார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் வசித்து வந்த செந்தமிழன் வயோதிகம் காரணமாக இன்றி காலமானார். சீமானின் அப்பாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஸ்டாலின்
இதையடுத்து சீமானுக்கு போன் செய்த முதல்வர் ஸ்டாலின், சீமானிடம் தைரியமாக இருங்கள்.. எனது இரங்கலை தெரிவிக்கிறேன். கலங்க வேண்டாம் என்று கூறினார். இதை கேட்ட சீமான் நீங்க என் கூட துணையா இருக்குறது எனக்கு பெருமையா இருக்கு.

நம்பிக்கை
நீங்க என் கூட இப்போ இருக்கிறது எனக்கு ரொம்ப நம்பிக்கையை கொடுக்குது. ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று சீமான் கூறினார். இதை கூறிக்கொண்டு இருக்கும் போதே சீமான் உடைந்து அழுது கண்ணீர்விட்டார்.

தைரியம்
இதை கேட்டதும் ஸ்டாலின் சீமானிடம் தைரியமாக இருங்கள்.. தைரியமாக இருங்கள் என்று கூறினார். இதையடுத்து அப்பாவிற்கு கொரோனா இருந்ததா என்று ஸ்டாலின் சீமானிடம் கேட்டார். இதற்கு சீமான், அப்பாவிற்கு கொரோனா இல்லை, வயோதிகத்தில் இறந்துவிட்டார்.

வயோதிகம்
அப்பாவின் உடலை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய போகிறோம். போன் செய்து இரங்கல் தெரிவித்ததற்கு ரொம்ப நன்றி என்று ஸ்டாலினிடம் சீமான் கூறினார். சீமான் இந்த போன் காலுக்கு பின் அப்படி உடைந்து போய், அப்பாவின் உடல் மீது விழுந்து கண்ணீர்விட்டார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications