ராகுலுக்கு சபாஷ்..'இது தமிழர்களின் நீண்டகால வாதத்திற்கான குரல்'..முதல்வர் ஸ்டாலின் நெஞ்சார்ந்த நன்றி
சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சுயமரியாதையை மதிக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து நேற்று நாடாளுமன்ற மக்களைவையில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் அனல் பறக்கும் பேச்சு
''மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும்'. மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது'' என்று கடுமையாக சாடினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள், தமிழக அரசு கூறி வரும் நிலையில் அதுபற்றியும் ராகுல் காந்தி பேசினார்.

தமிழகத்துக்கு குரல் கொடுத்த ராகுல்
''இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை . தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை. உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு போதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது'' என்று ராகுல் காந்தி கடுமையாக பேசினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழக எம்.பி.க்கள் கடும் வரவேற்பு தெரிவித்தனர்.

'நானும் ஒரு தமிழன்தான்'
மேலும் நேற்று தனது உரையை முடித்தபின் நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியே செல்வதற்காக ராகுல் காந்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிருபர் ஒருவர் ராகுல்காந்தியிடம் ''நீங்கள் தமிழ்நாடு பத்தி அதிகமா பேசறீங்க'' என்று ஹந்தியில் கூற, அதற்கு ராகுல் காந்தி ''நானும் தமிழன் ஒரு தானே'' என்று ஹிந்தியில் பதில் கூறியபடியே நடந்து சென்றார். இதற்கும் ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. தமிழக நெட்டிசன்கள் ராகுல் காந்தியை பாராட்டி வருகின்றனர்.

ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் புரட்சிகரமான பேச்சுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் கருத்தை அழுத்தமான முறையில் வெளிப்படுத்திய புரட்சிகரமான பேச்சுக்கு நன்றி. சுயமரியாதையை மதிக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications