முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்த கே.எஸ்.அழகிரி.. ஆலோசனை வழங்கியதாக பரபரப்பு பேட்டி!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியால் செய்ய முடியாததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 18 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
அப்போது தங்களுடைய ஒரு மாத ஊதியம் 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் அளித்தனர்.

கொரோனா பணிகள்
இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் ஒருமாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்றது முதல் கொரோனா நிவாரண பணிகளை மிக சிறப்பாக செய்துள்ளது.

மாபெரும் சாதனை
தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்துள்ளது. அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டோம். இது மாபெரும் சாதனை. இந்திய மக்கள் போற்றும் சாதனைதான் இது. பிரதமர் நரேந்திர மோடியால் செய்ய முடியாததை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.

சிறப்புமிக்க தீர்மானங்கள்
மத்திய அரசு தான்தோன்றித்தனமாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் குடியுரிமை திருத்த சட்டங்களை எதிர்த்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட இந்த தீர்மானங்கள் அனைத்தும் பேராண்மை மிக்கவை.

சந்தேகம் இல்லை
கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம். இது தவிர பல்வேறு ஆலோசனைகளையும் முதல்வருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கினோம். சட்டமன்ற தேர்தலைபோல், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

அ.தி.மு.க குற்றச்சாட்டு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது என்று நிருபர்கள் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், 'இந்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சியை போல் கிடையாது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை' என்று கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications