நன்றிக்கடன் பட்டுள்ளதாக சொன்ன ஸ்டாலின்! டிசம்பர் 18ல் சிறுபான்மை உரிமை தினம் கடைபிடிக்கப்படுவது ஏன்?
சென்னை: தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருக்கும் நிலையில், டிசம்பர் 18 ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்படுவது ஏன்? என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மதம் அல்லது மொழி சார்ந்த தேசிய, இன சிறுபான்மையினர் மக்களின் தனி உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக அனைத்து நாடுகளுக்கும் விரிவான அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாளான டிசம்பர் 18 ஆம் தேதியை தேசிய சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடித்து வருகிறது இந்தியா. மத சுதந்திம், சம வாய்ப்புகளை சிறுபான்மையினருக்கு கிடைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி
இந்த நாளை முன்னிட்டு நேற்று டெல்லியில் மத்திய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்கலா தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம், சீக்கியம், கிறிஸ்தவம், பௌத்தம், ஜெயின், சரதுசம் ஆகிய 6 சிறுபான்மை மதங்களை சேர்ந்த பிரதநிதிகள் கலந்துகொண்டனர். இதில் சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு செய்து வரும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள்
அதேபோல், நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக அரங்கேறும் குற்றங்கள் தொடர்பாகவும் சிறுபான்மை மத பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதேபோல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழா நடைபெற உள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
அதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் "தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளான 18-12-2022 அன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

சிறுபான்மை மக்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த நல்ல தருணத்தில் தமிழ்நாட்டில் வாழும் மத மற்றும் மொழிச் சிறுபான்மை மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்குச் சிறுபான்மையினர் ஆற்றும் பங்களிப்பு மகத்தானது.

சிறுபான்மை மக்களுக்கு நன்றி
தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும், தமிழர்களுக்கும், திராவிடப் பண்பாட்டுக்கும் அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளேன். மதம், சாதி ஆகிய எல்லைகளைக் கடந்து தமிழகத்தில் வாழும் அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்ச் சமூகமாக எழுந்து நிற்கவேண்டும் என்பதே நமது "திராவிட மாடல்" ஆட்சியின் உயரிய நோக்கம்.

தமிழ்நாட்டின் சிறப்பான பெருமை
மதம், சாதி, மொழி என்ற அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல் அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற்று, மனித மாண்புகளுடன் சமூகநீதி பெற்ற சமூகமாக வாழ எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படாமல் தனிமனித உரிமைகளுக்கான பாதுகாப்போடு வாழ்கின்ற முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பது நமக்கிருக்கும் சிறப்பான பெருமை ஆகும்.

தமிழ்நாட்டை முதல் மாநிலமகக்க முயற்சி
இந்த நல்ல நாளில் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் எனது அன்பையும் நல்வாழ்த்துகளையும் தெரிவியுங்கள். அவர்களது நல்ல முயற்சிகள் அனைத்துக்கும் எனது அரசு துணை நிற்கும். தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்ற நானும், நமது அரசும் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஒத்துழைப்பினையும் நல்க வேண்டும் என வேண்டுகிறேன்.

கருணாநிதி, என் மீது பாசம்
நமது ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் என் மீதும் சிறுபான்மைச் சமூகங்களின் மக்கள் கொண்டுள்ள அன்புக்கும். பாசத்திற்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். விழா சிறக்க எனது நல்வாழ்த்துகள்." என்று தனது வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி











Click it and Unblock the Notifications