பழைய வீட்டு கவலைய விட்டுத் தள்ளுங்கள்.. லட்ச லட்சமாய் அள்ளித் தருது தமிழக அரசு! இதை மட்டும் பண்ணுங்க
சென்னை: "முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமானத் திட்டம்" என்ற புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 210 சதுர அடிக்கு உட்பட்ட அளவில் தங்கள் வீடுகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள ரூ.2,40,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு அரசால் நேரடியாக தொகை விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் "முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்" என்ற புதிய திட்டத்தின் கீழ், 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் கட்டப்பட்டு, முழுவதும் பழுதடைந்து தற்போது பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை கொண்ட வீடுகளை 2025-26-ஆம் ஆண்டில் மறு கட்டுமானம் செய்ய தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட இத்தகைய வீடுகளின் பயனாளிகள் அல்லது அவ்வீட்டில் குடியிருக்கும் அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள் தற்போது மிகவும் சிதலமடைந்து முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கீரீட் கூரை கொண்ட வீடுகள் மட்டுமே தகுதியுள்ள வீடுகளாக கண்டறியப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சி அளவிலான தேர்வுக்குழு மூலம் இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 210 சதுர அடிக்கு உட்பட்ட அளவில் தங்கள் வீடுகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள ரூ.2.40,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு அரசால் நேரடியாக தொகை விடுவிக்கப்படும்.
ஆகவே, மேற்காணும் வீடுகளில் குடியிருப்போர் தங்களது நிலஉடமை ஆவணங்களான பட்டா அல்லது பத்திரம், ஆதார் அட்டை, பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை, பயனாளியின் பாஸ்போட் அளவிலான புகைப்படம், அலைபேசி எண் மற்றும் தற்போது குடியிருக்கும் வீட்டின் பழுதின் நிலை தெரியும் வகையில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் எடுத்த வண்ணப் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications