Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் ஆடிய நிஜ “செஸ் ஒலிம்பியாட்”.. ஆளுநருக்கு “செக் மேட்”! ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியதன் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பாராட்டை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் அரசியல் சதுரங்கத்தை ஆடி தற்போது வெற்றியும் பெற்று இருக்கிறார். ஆளுநர் ரவியின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஸ்டாலின் ஆடிய சதுரங்கம் குறித்து தற்போது பார்ப்போம்.

பொதுவாகவே பெரும்பாலானவர்களால் அரசியலுடன் ஒப்பிட்டு பேசப்படும் விளையாட்டு என்பது சதுரங்கம்தான். காரணம் அதன் அடிப்படையும் அரசியல்தான். ஆம், இரு நாடுகளின் ராஜா, ராணி, மந்திரி, படைகளுக்கு இடையிலான மோதலை மையமாக வைத்து ஆடப்படும் விளையாட்டு இது. மிகுந்த ஞானமும், சிந்தனை திறனும் உடையவர்களால் மட்டுமே இதில் வெற்றிபெற முடியும்.

உலகளவில் தமிழர்கள் கோலோச்சிக் கொண்டு இருக்கும் இந்த விளையாட்டின், சர்வதேச தொடரான செஸ் ஒலிம்பியாட்டை கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக நடத்திக்காட்டியது. இந்த நிலையில் தற்போது அரசியல் சதுரங்கத்தை ஸ்டாலின் ஆடி ஆளுநர் ரவிக்கு செக் மேட் வைத்து வெற்றிபெற்று உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 TN CM Stalin check mate for Governor RN Ravi and won in Online Rummy issue

அரசியல் சதுரங்கம்: ஆம், ஆளுநர் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதல், ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஒற்றை நகர்வின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெற்றி கண்டு இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலையிழந்து தவித்த நிலையில் விளம்பரங்களில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் காட்டிய ஆசை வார்த்தைகளை நம்பி ஆன்லைன் சூதாட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து மக்கள் விளையாட தொடங்கினார்கள்.

விளையாட தொடங்கியவுடன் சிறிய தொகையை பரிசாக வழங்கி ஆசையை அதிகரித்த ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பின்னர் மக்களிடம் பெரும் தொகையை சூதாட்டம் என்ற பெயரில் பறித்தனர். வட்டிக்கு கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடிய பலர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை தேடினர். காவல்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், குடும்ப தலைவிகள் என பல்வேறு தரப்பினர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ஆன்லைன் சூதாட்டம்: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கடந்த ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியதால் சில மாதங்கள் அது செயல்படாமல் இருந்தது. இதனை எதிர்த்து அன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இதனால் மீண்டும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

அதனை விளையாடி தற்கொலை செய்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை விதிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டசபையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

 TN CM Stalin check mate for Governor RN Ravi and won in Online Rummy issue

ஒப்புதல் தராத ஆளுநர்: ஆனால், ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்த சட்டம் காலாவதியானது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆளுநர் ரவியை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 21 பேர் தற்கொலை செய்துனர்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட அவசர சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்த நிலையில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், அவசர சட்டத்தில் திருத்தங்கள் செய்து அனுப்பி வைக்குமாறு மசோதாவை அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இந்த நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

செக் வைத்த ஸ்டாலின்: ஆனால், ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் தராமல், நிலுவையில் உள்ள மசோதாக்கள் எல்லாம், நாகரிகமாக நிராகரிக்கப்பட்டவை என்றே பொருள் தரும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், இன்று காலை அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திடும் வகையில், அதற்கு உரிய கால நிர்ணயம் செய்ய வகை செய்யும் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானம் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஸ்டாலின் வைத்த செக் மேட்டால்தான், இந்த ஒப்புதல் கிடைத்திருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+