பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்துக்குள்.. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும் பத்திரிகையாளர்கள் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைத்தனர்.

24 மணி நேரத்துக்குள் வந்தது அறிவிப்பு
இந்நிலையில், பத்திரிகையாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில், பத்திரிகையாளர்கள் நலனுக்கான ஒரு முக்கியமான அரசாணை வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் குடும்ப உதவித்தொகையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழைத்திருத்துபவர்கள் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக பணி அனுபவத்துக்கு ஏற்ப ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.
உதவித்தொகை உயர்வு
அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயாணல் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் ஒய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும். இந்தத் திட்டத்திற்கான செலவினங்கள் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இக்குடும்ப உதவி நிதி திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications