புதிய அரசு வெற்றியடைய வேண்டும்! பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: பஞ்சாப் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பகவ்ந்த் மானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மொழிவாரி மற்றும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்ததில் நீண்டதொரு வரலாற்றை தமிழகமும் பஞ்சாப்பும் பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி அரசு வெற்றியடைய தாம் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. பஞ்சாப் புதிய முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகரில் விழாவை நடத்தாமல் விடுதலை போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் விழாவை நடத்தி முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார் பகவந்த் மான்.

பகவந்த் மான்
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்த்கொள்வதற்காக லட்சக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டிருந்ததை காண முடிந்தது. பகவந்த் மானை போலவே ஆம் ஆத்மி தொண்டர்களும், நிர்வாகிகளும் மஞ்சள் நிற டர்பனை அணிந்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனிடையே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ஒரு புறம் தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்து வரும் சூழலில், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் பங்குக்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கியிருக்கின்றனர்.

ஸ்டாலின் வாழ்த்து
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி அரசு வெற்றியடைய தாம் வாழ்த்துவதாகவும் மொழிவாரி மற்றும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்ததில் நீண்டதொரு வரலாற்றை தமிழகமும் பஞ்சாப்பும் பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

மனமாற வாழ்த்து
மேலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு தனது மனமார்ந்த வாழ்த்தை உரிதாக்கிக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவில் இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் கிராமத்தில் வைத்த் பதவியேற்றுக்கொள்ளாத நிலையில், கிராமத்தில் பதவியேற்பு விழாவை நடத்தி தேசியளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் பகவந்த் மான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications