6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
சென்னை: 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைத்து அதற்கான பயிற்றுநர்களையும் நியமிக்க உள்ள தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுத்திட்டமான பள்ளிக் கல்வித் துறையில் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை சமச்சீர் கல்வியில் கணினி பாடத்தை அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 2011 ஆம் ஆண்டு கலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்கச் செய்தார்.

சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் (6-10) மட்டும் அடுத்த வந்த ஆட்சியாளர்களால் கலைஞரால் கொண்டுவரப்பட்ட உன்னதமான திட்டம் என்பதால் மாணவர்களுக்கு கணினி புத்தகம் குப்பை கழிவுகளாக மாற்றப்பட்டு கலைத்திட்டத்திலும் கணினி பாடம் நீக்கப்பட்டது. நம்மை பின்பற்றி இன்று பல மாநிலங்கள் தமிழக அரசை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கலைத்திட்டத்தில் ஒரு அங்கமாகவும் கட்டாய பாடமாகவும் கேரளா அரசு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2006-2011 ம் ஆண்டு 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது வரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது.
கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்த தமிழக அரசோ அதன்பின் வந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டது. பத்து ஆண்டுகள் போராடியும் பயனற்று போனது. 2016 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்கத்தில் போராட்டம் செய்த பொழுது மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "கணினி ஆசிரியர்களை போராட விடாதீர்கள்" அவர்களுக்கான பணி வாய்ப்பை வழங்குங்கள் என்று பத்திரிக்கை வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.
கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான , ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு வைத்தோம். தற்போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் 6992 அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி ஆய்வகங்கள் அமைத்து அதற்கான கணினி பயிற்றுநர்களையும் நியமிப்பதாக உள்ளனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்று 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.
60,000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் கணினி ஆசிரியர் சார்பாக மனமார்ந்த நன்றி. இவ்வாறு குமரேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications