பொரிஞ்சு தள்ளிட்டாராமே சோனியா.. "இதென்ன திமுக டீமுனு நினைச்சீங்களா".. விக்கித்த "தலை".. யார் பாருங்க
சென்னை: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம், நேற்று தனிப்பட்ட முறையில், சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார் இல்லையா? அதுகுறித்த ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
5 வருடங்கள் கழித்து, தமிழகத்துக்கு வருகை தந்திருந்தார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.. அவருடன், கட்சியின் பொது செயலாளருமான பிரியங்கா காந்தியும், சென்னை வந்திருந்தார்.

சோனியா காந்தி: நேற்று பிற்பகல், சோனியாவும், பிரியங்காவும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது, சோனியா காந்தியிடம் நிர்வாகிகள் சில முக்கியமான விஷயங்களை முன்வைத்திருக்கிறார்கள். சில புகார்களையும் கொண்டு சென்றுள்ளனர்.
குறிப்பாக, "தமிழக காங்கிரஸ் கட்சியின் இப்போதைய தலைவரை மாற்ற வேண்டும், 5 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதால் மாற்ற வேண்டும், தமிழக காங்கிரஸ் புதிய மேலிட பொறுப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் கோரிக்கையாக இருந்திருக்கிறது.
தலைமை பதவி: கடந்த 2 வருடமாகவே, தமிழக காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்திகள் கூடிவருகின்றன.. எனவே, ஒரு வருட காலமாகவே, தலைமை மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே உள்ளது.. அந்தவகையில், மாநில தலைவர் அழகிரி மீதான புகார்களை, அவ்வப்போது மேலிட பார்வைக்கும் தமிழக தலைவர்கள் கொண்டுசென்றுபடியே இருக்கிறார்கள்.. ஆனால், இந்த தேர்தல்வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்பதே அழகிரியின் விருப்பமாகவும் இருந்துவருவதாக தெரிகிறது.
எனினும் விரைவில் தேர்தல் வரஉள்ளதால், "தலைமையை உடனே மாற்றுங்கள்" என்ற கோரிக்கையை நேற்று சோனியா காந்தியிடம், கதர் தலைவர்கள் சற்று அழுத்தமாகவே வலியுறுத்தியிருக்கிறார்கள்.
என்ன காரணம்: அதுமட்டுமல்ல, ஆலோசனை கூட்டம் முடிந்ததுமே, எல்லோரும் கிளம்பிப் போய்விட்டார்களாம்.. அப்போது, சோனியாவை தனிப்பட்ட முறையில் சந்திக்க கே.எஸ். அழகிரி முயற்சித்துள்ளார். ஆனால், முடியவில்லை.
எனினும், டெல்லியில் உள்ள கே.எஸ். வேணுகோபாலை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார் அழகிரி. அவர் எடுத்த முயற்சியில், மாநாட்டிற்காக சோனியா கிளம்புவதற்கு முன்பு அழகிரிக்கு அப்பாயிண் மெண்ட் தரப்பட்டுள்ளது. அதுவும் 5 நிமிடங்கள்தான் டைம் தந்துள்ளார்கள்..
கடும் கோபம்: அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் கட்சிக்காக என்னென்ன நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது என்பது பற்றி ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஒரு ரிப்போர்ட்டை சோனியாவிடம் தந்தாராம் அழகிரி.. ஆனால், சோனியா அதை படித்துக்கூட பார்க்கவில்லையாம்.. பக்கத்தில் இருந்த பாதுக்காப்பு அதிகாரியிடம் அதனை தந்து விட்டாராம்.. பிறகு, அவரிடம் அழகிரி சில விஷயங்களை பேச முயன்றிருக்கிறார்..
உடனே சோனியா, "திமுகவின் ஒரு அணி மாதிரி, இந்த கட்சியை நடத்தி வந்திருக்கிறீர்கள்... நீங்கள் சீனியர்... நீங்களும் திமுகவின் யோசனைகளை நிறைவேற்றக்கூடிய தலைவராகத்தான் இருந்து வருகிறீர்கள்... அதனால்தான் காங்கிரசை குறைத்து மதிப்பிடுகிறார்கள்... அதை வைத்துதான் சீட் ஷேரிங் பேசுகிறார்கள்.. நீங்கள் போகலாம் என்று படபடவென பொரிந்து தள்ளி, அழகிரியை அனுப்பி வைத்துவிட்டாராம் சோனியா காந்தி. இதனால், அழகிரி தரப்பு அதிர்ந்து போய் கிடக்கிறதாம்.












Click it and Unblock the Notifications