Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இபி பில் ஜாஸ்தி வருதா.. இனி மின் கட்டணத்தில் வருது மாற்றம்.. ஈஸியா மாறபோகுது.. தமிழக அரசு "ஸ்மார்ட்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்வாரியம் அடுத்தக்கட்ட அதிரடியை துவங்கி உள்ளது.. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய வியூகத்தை வகுத்துள்ளது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த நன்மையை பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது.

இதன்கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco), தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) என 2 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

TN EB: Do you know what are benefits of Smart Meters and tamil nadu electricity boards next plan

தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன... இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. வழக்கமாக, வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. அந்தவகையில், உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய "ஸ்டேடிக்" என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

முறைகேடுகள்: இதன்மூலம் மின்வாரிய ஊழியர்கள், அதை கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதையடுத்து, நுகர்வோர்களும், அந்த கட்டணங்களை செலுத்திவருகின்றனர்..

மின்மீட்டர்கள்: அதன்படி ஒவ்வொரு வீடாக சென்று மின் மீட்டர்களில் பதிவாகும் ரீடிங்குகளை கணக்கெடுக்கும் பணிகளை Tangedco மேற்கொண்டு வருகிறது. இதற்காக மின் கணக்கீட்டாளர்களை தனியாக நியமித்து பணிகளையும் மேற்கொள்கிறது. ஆனால், மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக சமீபத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன? அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் ..

அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். ஒருவேளை கடைசி தேதிக்குள் மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லையென்றால், மின் விநியோகம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.. அதேசமயம், விடுமுறை தினங்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது.

பயன்கள்: இதற்கு மின் கணக்கீட்டாளர்களே தேவையில்லை... ஸ்மார்ட் மீட்டரில் இருக்கும் சிம் கார்டு போன்ற அமைப்பால் குறிப்பிட்ட அளவிற்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதே இந்த திட்டத்தின் சாராம்சம்.

அதுமட்டுமல்ல, மின்சாரம் திருட்டை தடுத்தல், மின்சார பயன்பாட்டை ஒரே இடத்தில் இருந்து கணக்கீடு செய்தல், வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இது போன்றவை ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.

TN EB: Do you know what are benefits of Smart Meters and tamil nadu electricity boards next plan

மின்சார அலுவலகம்: ஸ்மார்ட் மீட்டர் வந்துவிட்டால் மின்சார அலுவலகத்தில் இருந்தவரை ஒவ்வொரு வீட்டின் மின்சார பயன்பாட்டை கணக்கீடு செய்ய முடியும், எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது அதற்கான தொகை எவ்வளவு என்ற தொகையை மீட்டரில் நுகர்வோர் அறிந்து கொள்ள முடியுமாம்.

இதன் முதல்கட்ட பணிகளும் ஆரம்பமாகிவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட நகர்வில் மின்வாரியம் நுழைந்துள்ளது.. அதன்படி, வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடு, வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.. தற்சமயம், முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த சர்வதேச டெண்டரை கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

நாட்டின் பல இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், சென்னை தியாகராய நகரில் 1,32,000 இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கூடுதல் கட்டணம்: ஆனால், வெளிநாட்டில் இருந்து யாராவது ஹேக் செய்தால் மின்சார துண்டிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுகிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு ரூ.9000 ரூபாய் செலவாகிறது என்கிறார்கள்.. எனவே, மாதா மாதம் பராமரிப்பு செலவு என்ற பெயரிலும் மின்சார கட்டணத்தில் கூடுதல் தொகை வசூலிக்கப்படும் என தெரிகிறது.

இதன்காரணமாக, மாதாமாதம் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த அளவுக்கு மொத்தமாக முதலீடு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், நுகர்வோருக்கு விழிபிதுங்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும் என்ற கலக்கமும் உள்ளது..

அதிக செலவு: இது தொடர்பாக மின்சார துறை ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் சொல்லும்போது, எப்படி பார்த்தாலும், 24,000 கோடி செலவுபிடிக்கும் திட்டம் இதுவாகும்.. முக்கியமாக, இந்த திட்டம் தனியாருக்கு ஆதரவானது மற்றும் மத்திய அரசுக்கு மாநில அரசு பணிந்து செல்கிறது என்று அதிருப்தியுடன் கூறுகிறார்.

ஏற்கனவே கரண்ட் பில் உயர வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் பரவின.. இதற்கு எதிர்க்கட்சிகளும், தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்ததுடன், பொதுமக்களும், "8 மாசத்துக்குள்ளேயே மறுபடியும் மின்சார கட்டண உயர்வா" என்று அதிர்ந்தனர்.

ஆனால், மின்கட்டண உயர்வு இல்லை என்று தமிழக அரசு உடனடியாக வந்து அறிவித்து, பொதுமக்களின் கலக்கத்தை நீக்கியிருந்தது. அதுபோலவே, இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திலும், வெகுஜன மக்களின் மீது சுமையை கூட்டாமல், தமிழக அரசு தாங்கிப்பிடித்து கொள்ளும் என்று நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+