சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?
சென்னை: சென்னையில் அதிமுக சார்பாக 3 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் மற்றும் திருவிக நகர் ஆகிய 3 தொகுதிகளிலும் வளர்மதி, கோகுல இந்தியா மற்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் களமிறங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் அதிமுக போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், மொத்தமாக உள்ள 16 தொகுதிகளில் 13ல் அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் ராயபுரம் தொகுதியில் களமிறங்குகிறார். முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏ-க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகளில் 3ல் பெண் வேட்பாளர்களை களமிறக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.
அதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்மதியையும், அண்ணா நகர் தொகுதியில் கோகுல இந்தியாவையும் போட்டியிட வைக்க அதிமுக தலைமை ஆலோசித்துள்ளது. அதேபோல் தலித் சமூக மக்கள் அதிகமுள்ள திருவிக நகர் தொகுதியில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் திருவொற்றியூர் தொகுதியில் கார்த்திக் குப்பன், ஆர்கே நகர் தொகுதியில் மாவட்டச் செயலாளர் ராஜேஷ், கொளத்தூர் தொகுதியில் ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கும், திருமங்கலம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் மோகன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் விருகம்பாக்கம் தொகுதியில் ரவி, தி நகர் தொகுதியில் சத்தியா, எழும்பூர் தொகுதியில் அபிஷேக் ரங்கசாமி போட்டியிடுவார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் துறைமுகம் தொகுதியில் பாலகங்கா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதி ராஜாராம், வேளச்சேரி தொகுதியில் அசோக் போட்டியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications