ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை.. இனி 15 வயதுக்குட்பட்டோர் பயன்படுத்த முடியாது

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

UAE restricts social media accounts for children under 15

தற்போது குழந்தைகள் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களின் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதனால் தற்போது சில நாடுகள் 18 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.

அந்த வரிசையில் இப்போது ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை சார்பில் நாட்டில் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி ''நாட்டில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவற்கான குறைந்தபட்ச வயது 15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களில் கணக்கு துவங்குவதோ, பயன்படுத்தவோ கூடாது. சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க கூடாது. சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிரக்கூடாது.

சமூக வலைதளங்களில் 15 வயதுக்குட்பட்டோரின் கணக்குகளை கண்டறிந்து முடக்க வேண்டும். இதற்காக 12 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதையும் மீறி யாராவது சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் குறிப்பிட்ட அந்த சமூக வலைதள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அதிகாரம் அமீரகத்தின் ஊடக மற்றும் தொலைதொடர்பு கட்டுப்பாடு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைதள நிறுவனங்களுக்கு வார்னிங், அபராதங்கள், தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது. இதன்மூலம் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்த முதல் அரபு நாடு என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+