மனோஜ் பாண்டியன் vs அப்பாவு.. ராதாபுரம் தொகுதியில் களமிறங்கும் பனங்காட்டுப்படை.. சைலண்டான ஹரி நாடார்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரம் வாக்குகளை பெற்றது திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்த சூழலில், இம்முறை பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா நேரடியாக ராதாபுரம் தொகுதிக்கு மாறப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அப்பாவுவுக்கு எதிராக ஸ்கெட்ச் போடுவதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. கடந்த முறை ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றார். திமுக சார்பாக போட்டியிட்ட பூங்கோதை தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதியில் திமுகவின் தோல்விக்கு பனங்காட்டுப்படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் காரணமாக அமைந்தார். ஏனென்றால் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றினார். இது பூங்கோதையின் தோல்விக்கு நேரடி காரணமாக மாறியது. இம்முறை திமுக சார்பாகவே மனோஜ் பாண்டியன் நேரடியாக போட்டியிட உள்ளார்.
இதனால் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி போட்டியிட வேண்டாம் என்று மனோஜ் பாண்டியன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னொரு பக்கம் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா தொகுதி மாறுவதற்கான பணிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட தயாரான ராக்கெட் ராஜா, இப்போது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். ராதாபுரம் தொகுதியில் இருக்கும் சமூக வாக்குகளை தன் பக்கம் கொண்டு வர வேண்டும் என்ற அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இம்முறை ராதாபுரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதனால் பனங்காட்டுப்படை கட்சி பிரிக்கும் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாக மாறக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. இது அப்பாவுவுக்கு நேரடி செக்காக அமைந்துள்ளது. ராதாபுரம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா போட்டியிட்டால், திமுக வாக்குகள் பிரியும் நிலை இருக்கிறது.
இன்னொரு பக்கம் அப்பாவு தோல்வி அடைந்தால், சபாநாயகர் பதவியை தாம் எட்டிவிட முடியும் என்று மனோஜ் பாண்டியன் தரப்பும் கணக்கு போட்டுள்ளது. ஏற்கனவே மனோஜ்பாண்டியனின் தந்தை பிஎச் பாண்டியன் சபாநாயகராக இருந்திருக்கிறார். இதனால் தென் மாவட்ட அரசியல் கூடுதல் பரபரப்பாக மாறி இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications