இதுக்கும் பாஜக தான் காரணமா??.. விக்ரம் ஏன் நடந்து போய் ஓட்டு போட்டார் தெரியுமா.. கிளம்பிய பீதி!!
நடிகர் விக்ரம் ஏன் நடந்தே சென்று ஓட்டு போட்டார் என்ற விவாதம் கிளம்பி உள்ளது
சென்னை: நடிகர் விக்ரம் தன்னுடைய வீட்டிலிருந்து நடந்தே போய் ஓட்டுப் போட்டுள்ளார்... இவர் ஏன் நடந்தே போனார்? வட மாநிலத் தொழிலாளர்கள் நடந்தே போனதைக் குறிக்கும் வகையில் தான் விக்ரம் நடந்து சென்று ஓட்டு போட்டாரா என்ற சோஷியல்மீடியாவில் பரவி வருகிறது.
இன்று காலையில் இருந்தே நடிகர் விஜய் ஓட்டுப்போட்ட சம்பவம் டிரெண்ட் ஆகி வருகிறது.. நீலாங்கரை வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று ஓட்டுப்போட்டார்.
வீட்டுக்கு பக்கத்திலேயே பூத் இருப்பதால் சைக்கிளில் சென்றதாகவும், பார்க்கிங் பிரச்சனை இருப்பதால்தான் விஜய் இப்படி சென்றதாகவும் விளக்கங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

விஜய்
மற்றொரு பக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், பாஜகவுக்கு அரசை சுட்டிக்காட்டவே இப்படி சைக்கிளில் வந்தார் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்... இதற்கு காரணம், இந்த முறை தேர்தலில், பாஜக கடுமையான அதிருப்தியை சம்பாதித்துள்ளது.. விலைவாசியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வும் பெருகி உள்ளது..

பாஜக
ஏற்கனவே விஜய் மீதான வருத்தம், ரெய்டு நடவடிக்கை பாஜ தரப்பில் பாய்ந்துள்ள நிலையில், இன்றைய சைக்கிள் விஷயமும் பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கக்கூடிய நிகழ்வாக இருக்குமோ என்ற ரீதியில்தான் இது பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது விஜய்யை போலவே நடிகர் விக்ரம் ஓட்டுப்போட்ட விவகாரம் வைரலாகி வருகிறது. இவர் தன்னுடைய வீட்டில் இருந்து நடந்தே சென்று ஓட்டுப் போட்டுள்ளார். இவர் ஏன் நடந்து போனார் என்பதுதான் கேள்வியாக வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள்
லாக்டவுனில் வேலையிழந்த வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர்.. எத்தனையோ பேர் சாப்பாடு இல்லாமல் பசியால் இறந்தனர்.. எத்தனையோ பிஞ்சுகள் காலில் செருப்பு இல்லாமல் துடிதுடித்தன.. இந்தியாவையே உலுக்கி போட்ட இந்த சம்பவத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பிரதானமாக எடுத்து வைத்து, பாஜக அரசை விமர்சித்தனர்.. மக்களின் கடுமையான அதிருப்தியையும் பாஜக அரசு அப்போது சம்பாதித்தது..

வடமாநில தொழிலாளர்கள்
இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் ஆன நிலையில், ஒருவேளை இதை நினைவூட்டவே விக்ரம் நடந்து சென்று ஓட்டு போட்டிருப்பார் என்று ஒரு குரூப் சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.. இது உண்மையா என்றும் தெரியவில்லை.. ஆக மொத்தம், நடிகர்கள் வீட்டில் இருந்து சாதாரணமாக கிளம்பி வந்து ஓட்டு போட்டுவிட்டு செல்லும் விஷயம்கூட, அரசியலை மையப்படுத்தி பேசப்படுவது ஆச்சரியமாக உள்ளது.. இதில் பாஜகவையே குறி வைத்து பேசினாலும், அந்த அளவுக்கு மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications