மின்சார வாரியம் தந்த சர்ப்ரைஸ்.. கலக்கும் காற்றாலைகள்.. எகிறும் மின்உற்பத்தி.. இனிமேல்தான் நிம்மதி
சென்னை: காற்றாலை மின்சாரம் உற்பத்தி தொடர்பாக குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.. இது தமிழக மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்கிறது. இதுபோன்ற மின் உற்பத்தி நிலையங்களை தவிர பருவ காலங்களில் காற்றாலை மற்றும் சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், உடுமலை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்துார் உள்ளிட்ட இடங்களில், 10 ஆயிரம் மெகா வாட் திறனுடைய காற்றாலைகளை, தனியார் நிறுவனங்கள் நிறுவியுள்ளன..
ஆடிமாதம்: வழக்கமாக, ஆடி மாதம் இந்த காற்றாலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படும், குறிப்பாக, மே முதல் செப்டம்பர் வரை ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், காற்றாலை மின் உற்பத்தி சீசன் என்பார்கள்.. தமிழகத்தின் மின்தேவையை பெருமளவு இந்த காற்றாலைகளும் பூர்த்தி செய்கின்றன. இந்த ஆடி மாதங்களில் தினமும் சராசரியாக, 3,000-4,000 மெகா வாட் அளவுக்கு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்றாலைகள்: அந்தவகையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த சீசன் தொடங்கியிருந்தது.. ஜூலை 17ம் தேதி முதல், 15 நாட்கள் தினமும் சராசரியாக, 10 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தியாக இருந்து வந்த நிலையில், காற்றின் வேகம் படிப்படியாக குறைந்ததால், தினமும் சராசரியாக, 2.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது.. காற்றின் வேகம் தினமும் மாறுபட்ட காரணத்தால் அதிகபட்சமாக 80 மில்லியன் யூனிட் வரை மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.
செப்டம்பர்: எப்படியும் இந்த செப்டம்பர் மாதத்துக்குள் மின் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் என்று இந்திய காற்றாலைகள் சங்க தலைவர் கஸ்துாரி ரங்கையன் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார். தற்போது, தமிழக மின் தேவையானது, பகலில், 15,000 மெகாவாட்டாகவும், காலை, மாலையில், 16,000 மெகாவாட் என்றளவிலும் உள்ள நிலையில், காற்றாலைகளின் மின் உற்பத்தி தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன..
அதன்படி, கடந்த வாரத்தில், மத்திய தொகுப்பு மற்றும் காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டதால், மின் வாரியத்திற்கு சொந்தமாக, 4,320 மெகாவாட் திறன் உடைய 5 அனல் மின் நிலையங்களிலும், 3,000 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதிக மின்சாரம்: கடந்த சனிக்கிழமை முதல் காற்றாலைகளில் இருந்து, 5,400 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. அந்த மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்த, சேலம் - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா, 210 மெகாவாட் திறன் உடைய 2 அலகுகளிலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா, 210 மெகாவாட் திறன 210 மெகாவாட் திறன் உடைய மூன்று அலகுகளிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாம்.
குட்நியூஸ்: இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, "காற்றாலைகளில் மின் உற்பத்தி இப்போது உச்சநிலையில் இருக்கிறது. காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 10ம் தேதி 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 11ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு 3,794 மெகாவாட், காலை 7.50 மணிக்கு 4,314 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தது. இவை தவிர சோலார் மூலம் கடந்த 10ம் தேதி 4, 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.
காற்றாலை மற்றும் சோலார் மூலம் சராசரியாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி அனல் மின்நிலையங்களில் உற்பத்தி பாதியாக அதாவது 1,599 மெகாவாட் என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் அன்றைய தினம மின் தேவை 15,331 மெகாவாட் ஆக இருந்தது" என்றனர்.
உற்பத்தி அதிகம்: காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications