வீடுகளில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி பில் வருமா? மின் வாரியம் விளக்கம்!
சென்னை: ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என பரவும் தகவல் உண்மையல்ல, சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், வணிக நிறுவனங்கள், தொழில்ற்சாலைகளுக்கு வசூலிக்கப்படுவது போல அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளில் வீட்டு மின் இணைப்புகள் 2.42 கோடி மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், வீட்டு மின் இணைப்புகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படுவது போல, வர்த்தக பிரிவின்படி மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் பரவியுள்ளது. இந்நிலையில், அது தவறான தகவல் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 601 பேர் மட்டுமே 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இது மொத்த வீட்டு இணைப்புகளில் 4.08 சதவீதம் மட்டுமே. மற்ற 96 சதவீதம் பேர் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்துகின்றனர். 100 யூனிட் வரை எந்த வித கட்டணமும் இல்லை என்பது தொடர்கிறது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கன்டென்ட் போதும்.. மக்களுக்கு கரன்ட் கொடுங்க.. செந்தில் பாலாஜி காட்டம் -
Tamil Nadu Monthly Electricity Bill System: மாதாந்திர மின் கட்டணம் எப்போது? விஜய்க்கு ராமதாஸ் கேள்வி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications