சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"காலேஜே போகாதவங்க அறிவுரை சொல்றாங்க"..மாஸ்க்கிலேயே மெசேஜ் அனுப்பிய அமைச்சர் பிடிஆர்.. சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: கல்லூரி பக்கமே போகாதவர்கள் எல்லாம் நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு அறிவுரை சொல்கிறார்கள் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

    அதிரடி பேச்சு.. மலைக்க வைத்த பின்னணி.. யார் இந்த PTR ?

    தமிழ்நாட்டில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பதவி ஏற்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்வை கண்டிப்பாக தடை செய்வோம் என்று அறிவித்துள்ளது.

     4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற 20 வயது இளைஞர்.. 9 வயது சிறுவன் உயிர் ஊசல்.. அதிர்ச்சி 4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற 20 வயது இளைஞர்.. 9 வயது சிறுவன் உயிர் ஊசல்.. அதிர்ச்சி

    இதை சட்ட ரீதியாக முறையாக தடை செய்ய வசதியாக, இது பற்றி ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த குழு கொடுக்கும் அறிக்கையின்படி நீட் தேர்வு தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     பல தேர்வு

    பல தேர்வு

    இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்தார். அதில், நான் சர்வதேச அளவில் பல நுழைவுதேர்வுகளை எழுதி இருக்கிறேன். இடிஎஸ் வகை நுழைவு தேர்வுகளை நான் எழுதி இருக்கிறேன். இதுபோன்ற தேர்வுகளால் என்ன நன்மை, என்ன தீமை என்பதை பற்றி பேச எனக்கு தகுதி இருக்கிறது. நிறைய பேரை விட எனக்கு இதில் தகுதி அதிகம் உள்ளது.

    மோடி

    மோடி

    பிரதமர் மோடி கல்லூரியில் படித்த ஆதாரம் இல்லை. அவர் இதுபோன்ற டெஸ்ட் எழுந்திருக்க வாய்ப்பு இல்லை. முன்னாள் அமைச்சர்கள் யாரும் இப்படி டெஸ்ட் எழுதவில்லை. கல்லூரி பக்கமே போகாதவர்கள் நீட் பற்றி எல்லாம் அறிவுரை சொல்கிறார்கள். வெவ்வேறு கல்வி திட்டங்கள் கொண்டவர்கள் போட்டியிடும் போது மட்டுமே இதுபோன்ற டெஸ்ட்கள் உலக அளவில் நடத்தப்படும்.

     சிக்கல்

    சிக்கல்

    ஆனால் உலகில் இதுபோன்ற டெஸ்ட்கள் நடத்தப்படும் நாடுகளில் சிக்கல் உருவாகி வருகிறது. பணம் மற்றும் வாய்ப்பு உள்ளவர்கள்தான் நீட் போன்ற தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. 12 வருடம் படித்தவர்களின் அறிவு, ஒரே நாளில், ஒரே தேர்வில் முடிவு செய்ய முடியாது. இதனால்தான் உலகில் இதுபோன்ற டெஸ்ட்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வருகிறார்கள். இது பாகுபாடு உடைய டெஸ்ட் முறை.

    தவறு

    தவறு

    இந்த டெஸ்ட் முறை சரி இல்லை என்று சர்வதேச நாடுகள் கருத தொடங்கி உள்ளன. இந்தியா போன்ற ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வு கொண்ட நாட்டில் நீட் தேர்வு முறை, நீட் மாடல் தவறானது. நான் ஜிஆர்இ டெஸ்டில் 96% வாங்கியவன் என்ற ரீதியில் சொல்கிறேன். இந்த நீட் தேர்வு சரியான வாய்ப்பு கிடையாது. ஏழைகள், வாய்ப்புகள் இல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

     மனிதாபிமானம் இல்லை

    மனிதாபிமானம் இல்லை

    இது மனிதாபமானற்ற தேர்வு, சமூகநீதிக்கு எதிரான தேர்வு. அனிதாவின் மரணத்தை போது நான் உடைந்து போனேன். அரசியலில் இருப்பதற்கே வேதனைப்பட்டேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அனிதாவிடம் பொய் சொல்லி ஏமாற்றினார்கள். இந்த டெஸ்ட் கொஞ்சம் கூட நியாயமற்றது. இது அர்த்தமற்ற, அறிவியல் பூர்வற்ற தேர்வு.

     அனுமதிக்க மாட்டார்கள்

    அனுமதிக்க மாட்டார்கள்

    அறிவு உள்ளவர்கள், படித்தவர்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாடு இந்தியாவை விட கல்வியில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டிற்கு யாரும் கல்வியில் அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தேசிய அளவில் இருந்து தமிழ்நாட்டிற்கு யாரும் அறிவுரை கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது, என்று அமைச்சர் பிடிஆர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

     மாஸ்க்

    மாஸ்க்

    இந்த நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு ban neet என்று நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று வாசகம் அடங்கிய மாஸ்க்கை பிடிஆர் அணிந்து இருந்தார். அதோடு மாஸ்க்கின் இன்னொரு பக்கம் மாணவர்களை காப்பாற்றுங்கள் save students என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.

    English summary
    Tamilnadu finance minister PTR Palanivel Thiagarajan speech on Neet exam and its model against poor students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X