அரண்மனை விவகாரம்- அங்கிட்டு பொரணி பேசிகிட்டு இங்கிட்டு பொரியல் கூட்டா? இது மெய்யா சிங்கம் கோப்பால்?
சென்னை: தமிழக அரசியலில் எப்போதும் அரண்மனை விவகாரங்கள் அதகளப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்தான் மாறுவதில்லை.
நாடு விடுதலை அடைந்த காலம் இன்று வரை வாரிசுகள், ஊழல்கள், திடுமென சாம்ராஜ்யங்கள் செல்வத்தில் திளைப்பதும் சடுதியில் சாய்ந்து நடுத்தெருவுக்குப் போவதும் தொடருகிறது.

இந்த பட்டியலில் அரண்மனை விவகாரத்தை வில்லங்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர் ஆளும் அரசின் புதிய வில்லன்கள். ஆனால் இவர்களது வியாக்கியானங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தானோ? என்கிற வகையில் அமோக அறுவடையை நடத்துகிறதாம் வில்லன்களுக்கு பின்னால் நிற்கும் தளபதிகள் கூட்டம்.
ஆம். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் இடைவிடாமல் அரண்மனை நிறுவனத்தை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார் அந்த தலைவர். அப்படி செய்கிறார்கள்.. இப்படி செய்துவிட்டார்கள் என்றெல்லாம் விடா கண்டன் கொடா கண்டன் கணக்காய் பட்டியல் பட்டியலாக படிக்கிறார் சிங்கமாக உருமாறிய தலைவர்.
இந்த போக்கால் எத்தனை தலைகள் உருண்டுவிழுமோ என்றெல்லாம் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தாலும்.. அப்படி எல்லாம் நடக்காது; ஏனெனில் சிங்கத் தலைவரின் சிம்மாசனத்துக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களே அரண்மனை நிறுவனத்தின் கூட்டாளிகளாகிவிட்டார்களே என கண்சிமிட்டுகிறார்கள் சிலர்.
இந்த கூத்தும் மேற்கு மண்டலத்தில்தான் நடந்திருக்கிறதாம்.. இந்த புதிய பொரியல் கூட்டணியால் அரண்மனை நிறுவனங்கள் மீது இனி மேம்போக்காகத்தான் சிங்கம் கோப்பால் பேசுவாராம்... இல்லை எனில் உள்வீட்டு மேட்டரும் சிரிப்பாய் சிரித்துவிடுமாம்!
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
வெளிச்சம் டிவி என்னுடையது! விசிகவுக்கும் சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பனையூர் பாபு பரபரப்பு -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்!












Click it and Unblock the Notifications