தை பொங்கலும் வந்தது.. கரும்பும் வந்தது.. அட போனஸும் வந்தாச்சுப்பா.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அரசு ஊழியர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வர உள்ளது.. இதையொட்டி, 15, 16, 17 தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் போனஸ் வழங்கப்படும்.. குறிப்பாக 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.
அதனால் வரும் பொங்கலை முன்னிட்டு, 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் போனஸ் தொகை 30 நாட்கள் சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
ஆனால், வழக்கம்போல, இந்த வருடமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், "'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications