Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நனவாகிறது கருணாநிதி கனவு? 2025-ல் திருச்சியில் 12-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தும் தமிழக அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-ம் ஆண்டு திருச்சியில் 12-வது உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது.

இந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1964-ம் ஆண்டு முதல் இதுவரை 27 மாநாடுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள்தான் நடைபெற்றுள்ளன. முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966-ல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. 2-வது உலகத் தமிழ் மாநாடு நடத்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த பக்தவச்சலம் ஒப்புதல் பெற்றார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் தோற்று திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக பேரறிஞர் அண்ணா பதவி வகித்த போது தமிழக அரசின் நிதி உதவியுடன் 1968-ல் சென்னையில் பிரமாண்டமாக 2வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.

அண்ணா நடத்திய 2-வது உலகத் தமிழ் மாநாடு

அண்ணா நடத்திய 2-வது உலகத் தமிழ் மாநாடு

1968-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2-வது உலகத் தமிழ் மாநாட்டின் போதுதான் சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞர்களுக்கு வரிசையாக சிலைகள் வைக்கப்பட்டன. இந்த மாநாட்டி ல் ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேன், பிரதமராக இருந்த இந்திரா காந்தி உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தார். அவரது முன்முயற்சியில்தான் சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞர்கள் சிலை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் முதல்வராக கருணாநிதி பதவி வகித்த காலங்களில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது நிறைவேறாமல் போனது.

எம்ஜிஆர், ஜெ. ஆட்சிக் கால மாநாடுகள்

எம்ஜிஆர், ஜெ. ஆட்சிக் கால மாநாடுகள்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது 1981-ம் ஆண்டு மதுரையில் 5-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிலும் பிரதமராக இருந்த இந்திரா காந்தி பங்கேற்றார். 1995-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். ஆனால் அந்த மாநாட்டில் சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழறிஞர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது மிகப் பெரும் சர்ச்சையானது. சென்னை விமான நிலையத்தில் இருந்தே தமிழறிஞர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

10,11-வது உலகத் தமிழ் மாநாடுகள்

10,11-வது உலகத் தமிழ் மாநாடுகள்

பின்னர் 2010-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அதற்கு ஒப்புதல் தராததால் செம்மொழி மாநாடாக நடைபெற்றது. கடைசியாக 10-வது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 2018-ல் நடத்தப்பட்டது. 11-வது உலகத் தமிழ் மாநாடு சார்ஜாவில் 2023-ல் நடத்தப்பட உள்ளது.

12-வது உலகத் தமிழ் மாநாடு

12-வது உலகத் தமிழ் மாநாடு

இந்நிலையில் திருச்சி துவரங்குறிச்சியை சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அலீம், 12-வது உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும். அதற்கு அரசு ஒப்புக்கொள்ளுமா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். அதற்கு, திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் 2025-ல் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்த முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட உலகத் தமிழ் மாநாடு நடந்தது இல்ல்லை. தமது ஆட்சியில் ஒரு உலகத் தமிழ் மாநாட்டையாவது நடத்த கருணாநிதி விரும்பினார். இந்த நிலையில் கருணாநிதி கனவு நிறைவேறும் வகையில் 2025-ல் தமிழக அரசு திருச்சியில் 12-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் அறிவிப்பை எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்பது பெரும் எதிர்பார்ப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+