81 வயசாகுது.. இன்னைக்குன்னு பார்த்து ட்வீட் போட்ட கவுண்டமணி.. அதுவும் எதை பத்தி பாருங்க..!
கவுண்டமணி ட்வீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: பத்மா சேஷாத்ரி சம்பவம் குறித்து நடிகர் கவுண்டமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஒருட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.
நேற்றில் இருந்து பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரம் பெரும் பரபரப்பையும், பல்வேறு விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.
பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியர் ராஜகோபாலனை அரெஸ்ட் செய்துள்ளனர்.. புழலிலும் அடைத்துள்ளனர்.. வரும் 8-ம்தேதி நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது..

தமிழகம்
சட்டரீதியாக இந்த பிரச்சனை இனி தொடர்ந்து நடக்கும் என்றாலும், இந்த சம்பவத்துக்கு தமிழகம் முழுக்க கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.. செய்திகள் வெளிவந்த உடனேயே, திமுக எம்பி கனிமொழி, உட்பட, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரை கொந்தளித்திருந்தனர்.. அனைவரும் ஒருமித்து சொன்ன கருத்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை தர வேண்டும் என்பதுதான்..

கவுண்டமணி
அந்த வகையில்தான் நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ''பள்ளியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்...

பேட்டி
வழக்கமாக பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாதவர்... பேட்டிகளையும் பெரிய அளவில் தராதவர் கவுண்டமணி.. கிட்டத்தட்ட அஜித் மாதிரிதான்.. தன்னை எந்த சூழலிலும் விளம்பரப்படுத்தி கொள்ளாதவர்.. வெகு யதார்த்தமான நபர்.. இயல்பாகவே இருப்பது அவருக்கு பிடித்துள்ளது.. அதேசமயம், கண்ணெதிரே நடக்கும் சமூக அவலங்கள் குறித்து தன் கருத்தை மறக்காமல் பதிவிட்டு வருபவர்..

தொற்று
சில நாட்களுக்கு முன்புகூட, "கொரோனா வைரஸ் சாதாரண நோய் இல்லை. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் பார்க்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவசரமாக இருந்தால் மட்டுமே வெளியே வாருங்கள்" என்று கவுண்டமணி ட்வீட் போட்டு உருக்கமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

ட்வீட்
இன்றும் அப்படியே, பத்மா சேஷாத்ரி ஆசிரியர் விஷயத்திலும் தன் கண்டனத்தை மறக்காமல் செய்துள்ளார்.. அதுமட்டுல்லாமல் இன்றைக்கு கவுண்டமணிக்கு 81வது பிறந்த நாள்.. ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் நாளில், பெண் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனை என்றதும், ஓடோடி வந்து குரல் கொடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications