சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான மின் கணக்கீடு எடுக்கப்படாது! அப்போ பேமண்ட்?
சென்னை: அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு 6 முறை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த மின் கட்டணம் செலுத்துவதற்காக தமிழக மின்சார வாரியம் அவரவர் பயன்பாட்டை பொருத்து டாரீஃப் ரேட்டுகளை வைத்துள்ளது.

அந்த வகையில்தான் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார வாரிய ஊழியர் வீடு வீடாக வந்து மின் கணக்கீடு செய்வார். அட்டையில் எத்தனை யூனிட்கள் வந்துள்ளன. எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக கொடுத்துவிடுவார்கள்.
அதை வைத்து நாம் காலகெடுவுக்குள் மின்சார வாரியத்திலோ அல்லது இணையதள வாயிலாகவோ பணத்தை செலுத்திக் கொள்ளலாம். இந்த நிலையில் அக்டோபர் மாதம் வீடுகளுக்கு வந்து மின்சார வாரிய ஊழியர் கணக்கெடுத்து சென்றுவிட்டார். அதற்கான மின் கட்டணத்தையும் செலுத்தியாகிவிட்டது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மழை, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவற்றை மோட்டார் போட்டு போட்டு வடித்தாலும் இன்னும் மாளவில்லை. இந்த நிலையில் டிசம்பர் மாதம் மின் கட்டண கணக்கீடு எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் மாத கணக்கீட்டின்படியே மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications