தமிழகத்தில் நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒரே நாளில் 39 பேர் பலியாகிவிட்டனர்.
தற்போது கொரோனாவுக்கு 1,79,205 சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 19,978 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.

தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை (ஜன 9, 16) முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலாகி வருகிறது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

23 ஆம் தேதி முழு ஊரடங்கு
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் தேதி முழு ஊரடங்கு அமலாகுமா என்ற கேள்வி எழுந்தது. கடந்த 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்காவிட்டால், அன்றைய தினம் காணும் பொங்கலையொட்டி மக்கள் நீர் நிலைகள் இருக்கும் இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களுக்கு படையெடுப்பர் என்பதால் அன்றைய தினம் லாக்டவுன் போடப்பட்டது.

செயல்பாடுகள்
இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் போடப்படாது என்றுதான் கருதப்பட்டது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் வரும் 23 ஆம் தேதியும் கடைப்பிடிக்கப்படும்.
Recommended Video

ஊரடங்கில் எதற்கு தடை? எதற்கு அனுமதி
அது போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டதோ அதற்கெல்லாம் இந்த முறையும் தடை விதிக்கப்படும். முழு ஊரடங்கின் போது வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்கலாம். சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள், ஆட்டோக்களை இயக்கலாம். அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications