முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு சென்னையில் அடுத்த மாதம் 5, 6 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அதில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அரசு நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின், உயர்மட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தின் போது, அனைத்து துறைகளும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாட்டு நிலையை அறிந்து அதற்கேற்ப பணிகளை முடுக்கி விடுவது வழக்கம். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்களையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் நல பணிகள், அப்பணிகள் உண்மையாகவே மக்களை சென்றடைந்துள்ளதா? என்பது பற்றி ஸ்டாலின் கேட்டறிந்து அறிவுரை வழங்கி வருகிறார்.
போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, அதில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஸ்டாலின் நேரடியாக கேட்டு அறிவுரை வழங்கி வருகிறார். அந்த வகையில் தான் தற்போது, வரும் நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இந்த மாநாடு நடைபெறும் என்றும் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி, மற்றும் ஐ.ஜி.க்கள் கலந்துகொள்வார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதா? என்பதை ஸ்டாலின் ஆய்வு செய்து, அதுபற்றி மாவட்ட ஆட்சியர்களிடம் நேரடியாக கேட்டறிவார். அதே போல் மாவட்டங்களில் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அதில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிவார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications