MBBS சீட் வீணா போகலாமா? முட்டி மோதி அனுமதி வாங்கி கவுன்சிலிங் நடத்தும் தமிழக அரசு.. தேதி அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தி காலி இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்து, கலந்தாய்வு தேதிகளையும் மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமாக 6,326 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் சேர்ந்து 1,768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியானது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேர் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றனர்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை மாதம் 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்டன.
மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்திய நிலையில் இன்னும் நிரப்பப்படாமல் 86 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி கல்லூரிகள் - 17 சீட் என மொத்தம் 86 இடங்கள் காலியாக உள்ளன.

எம்.பி.பி.எஸ் சீட்கள் வீணாகாமல் தடுக்கும் வகையில், இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், தற்போது கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது.
காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. மத்திய இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (அக்டோபர் 31) தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications