அரசு இடம் ஆக்கிரமிப்பு.. ஒரு மாதத்திற்குள் கட்டடங்களை அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு கெடு
சென்னை: தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரில் ஒரு மாதத்திற்குள் கட்டடங்களை அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு கெடு விதித்துள்ளது.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைச்சமுத்திரத்தில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு கெடுவிதித்தது. அப்போது வட்டாட்சியராக இருந்த அருணகிரி , அந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று அளவிடும் பணியை தொடங்கினார். பின்னர் பல்கலைக்கழக மாணவர்களும் பெற்றோரும் சேர்ந்து அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மாணவர்கள் படிக்கக் கூடிய நேரத்தில் கட்டடங்கள் இடிக்கப்பட்டால் அது அவர்களின் கல்வியை பாதிக்கும் என மனு அளித்தனர்.

அந்த மனு மீதான விளக்கத்தை அளிக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 3 ஆண்டுகளில் இந்த குழு விசாரணையில் இறங்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, அந்த குழுவை கலைத்துவிட்டு நில சீர்திருத்த இயக்குநர் ஜெயந்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சாவூர் வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்தனர். மேலும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தமிழக அரசிடம் அறிக்கையும் தாக்கல் செய்யப்படட்து. இந்த நிலையில் நேற்று சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், நான்கு வாரங்களுக்குள் (24.03.2022) ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தஞ்சை கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகத்திடம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications