Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அட்டைதாரர்களே.. இனி நிம்மதியா இருக்கலாம்..தமிழக அரசு இன்னொரு அதிரடி.. பெருகுகிறது நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. இதனால், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாகவே, ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் அதிகமாகவே நடந்து வருகிறது.. அதனால்தான், ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

TN Government civil supplies and consumer protection deps good work and whats the Major instruction

கடத்தல்: மேலும், கடத்தல் அல்லது பதுக்கலில் ஈடுபடுவோர் மீது இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டுவருவதுடன், ரேஷன் பொருட்களை கடத்தும் நபர்களையும் உடனுக்குடன் கைது செய்தும் வருகிறார்கள்..

அத்தியாவசியம்: சமீபத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அந்த அறிக்கையில், "அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 01.05.2023 முதல் 31.05.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ18,41,994/- மதிப்புள்ள 2447 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 269 எரிவாயு உருளைகள், 180 கிலோ கோதுமை, 1100 கிலோ துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் 450 லிட்டர் ஆகியவையும், 150 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.

பதுக்கல்: குற்றச்செயலில் ஈடுபட்ட 561 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980 ன்கீழ் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் சக்கரபாணி: இதற்கு நடுவில் அமைச்சர் சக்கரபாணி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. எந்த காரணம் கொண்டும் பொருட்கள் தேங்கியிருக்க கூடாது, தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு காரணம், ரேஷன் அட்டைதாரர்கள் சிலர், தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லையாம்.. இதனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருட்கள் தேங்கி விடுவதால், அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.. இந்த பொருட்களை சிலர் கள்ளத்தனமாக விற்றுவிடுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அதனால்தான், பொருட்களை வாங்காமல் தாமதித்தால், அப்பொருட்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

அதிரடி கைது: அரசு, இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தபிறகும்கூட, ரேஷன் அரிசி கடத்தல் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிவில் சப்ளை சிஐடி பிரிவின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை மண்டலங்களில் கடந்த 2ம் தேதி முதல், வரை நடந்த சோதனையில், 1.67 லட்சம் கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய 38 வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.. தமிழகம் முழுதும் இந்த ஒரே மாதத்தில் மட்டும், மொத்தம் 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரித்ததில், ரேஷன் கடை ஊழிர்களின் பங்களிப்புடன்தான், இந்த கடத்தல் நடப்பது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, சிவில் சப்ளை சிஐடி போலீசார், கடை ஊழியர்களின் லிஸ்ட் ஒன்றினை, தயாரித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அவைகளை அனுப்பி வைத்தனர்.

அரிசி கடத்தல்: கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலுார், திருவண்ணாமலை, கோவை, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலிருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்வதாக தெரிகிறது..

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "கடத்தல் கும்பலுடன் கைகோர்த்த ரேஷன் பணியாளர்களின் பட்டியலை தயாரித்து கண்காணிக்கிறோம். விரைவில் விற்பனையாளர்கள் சிக்குவார்கள்.. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து மக்கள், 1800-599-5950 என்ற நம்பரில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+